மஹிந்த மைத்திரி இரகசிய சந்திப்பு?

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


மஹிந்த மைத்திரி இரகசிய சந்திப்பு?

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச கடந்த வாரம் இரகசியமாகச் சந்தித்துப் பேசியிருப்பதாக, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் உள்ள பிரதமரின் செயலகத்தில், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, மகிந்த ராஜபக்ச சந்தித்துப் பேச்சு நடத்திய பின்னர், இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

இந்தச் சந்திப்பின் போது, சில அரசியல் விவகாரங்களில் அரசாங்கத்தின் நகடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாக, சிறிலங்கா அதிபருக்கு, மகிந்த ராஜபக்ச உறுதியளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சீனாவுடனான உறவுகள், மற்றும் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள சில சட்டங்கள் குறித்தும் இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் செய்து கொள்ளப்பட்ட சில உடன்பாடுகள் குறித்தும், இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் கொழும்பு ஆஙகில வாரஇதழ் தெரிவித்துள்ளது.