மஹிந்த ராஜபக்ஸவை பிரதமராக்குவதற்கு முயலும் சில ஆதரவாளர்கள்!


மஹிந்த ராஜபக்ஸவை பிரதமராக்குவதற்கு முயலும் சில ஆதரவாளர்கள்!

மஹிந்த ராஜபக்ஸவை பிரதமராக்கு

மஹிந்த ராஜபக்ஸவை பிரதமராக்கு

எதிர்வரும் மாதங்களில் முன்னாள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிகளை வகித்த மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் பிரதமர் பதவிக்கு நியமிக்கப்படுவார் என்ற ஊகங்களுக்கு மத்தியில், அவரின் ஆதரவாளர்கள் அந்த பதவிக்கான அழுத்தங்களை கொடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரதமர் பதவியில் மாற்றங்களைச் செய்வதற்கு எந்த நடவடிக்கையும் இல்லை என பிரதமர் தினேஸ் குணவர்தன ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

எனினும் ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் உட்பட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் குழுவொன்று மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக நியமிக்க வலியுறுத்தி வருகின்றது.

அண்மையில் மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரியின் இல்லத்தில் நடைபெற்ற இரவு விருந்தின் போது நடைபெற்ற கலந்துரையாடலில், அவரை மீண்டும் அரசாங்கத்தின் உயர் பதவிக்கு நியமிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக இன்றைய சிங்கள செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே இன்று மொணராகலையில் நடைபெறுகின்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாவட்ட பேரணியில் மஹிந்த ராஜபக்ஷ கலந்துக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர் சசீந்திர ராஜபக்ஷவினால் இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கட்சியின் மீளெழுச்சிக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் திட்டமிடப்பட்டுள்ள முக்கிய மாவட்ட பேரணிகளில் மொணராகலை பேரணியும் ஒன்றாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ஸவை பிரதமராக்கு