மாரடைப்பு வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்? தெரிந்துகொள்ளுங்கள்


மாரடைப்பு வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்? தெரிந்துகொள்ளுங்கள்

மாரடைப்பு வராமல் தடுக்க என்ன வழிகள்? மாரடைப்பு வர காரணம் என்ன என்று இந்த பதிவில் அலசுவோம்.

அண்மைக்காலமாக மாரடைப்பு மற்றும் இருதய நோய்கள் மிகவும் பொதுவானதாகவும், மக்களை அச்சுறுத்துவதாகவும் மாறிவிட்டது.

வயதானவர்களுக்கு மட்டுமே மாரடைப்பு வரும் என நினைத்துக்கொண்டிருந்த காலம் மலையேறிவிட்டது. மிக இளம் வயதினர் கூட மாரைப்பால் இறந்து வருகின்றனர்.

நெஞ்சில் வலி வந்தால், அது ‘வாய்வு வலி’யாக இருக்கும் என நினைத்து, தகுந்த சிகிச்சை பெறாமல் அலட்சியமாக இருப்பவர்கள் இருக்கிறார்கள்.

அதேவேளையில், நெஞ்சு லேசாக வலித்தாலே அது மாரடைப்பாக இருக்குமோ என்று பயந்து மருத்துவமனைக்கு ஓடுபவர்களும் இருக்கிறார்கள்.

சாதாரண தசை வலியிலிருந்து இதய நோய்வரை பல நோய்களுக்கு நெஞ்சு வலி ஒரு முக்கிய அறிகுறியாக இருப்பதால், இதை அலட்சியப்படுத்த முடியாது.

முதுகு வலி நீங்க என்ன செய்ய வேண்டும்? இதோ எளிய வழிகள்

அதேவேளையில் எல்லா நெஞ்சுவலியும் மாரடைப்பாகத்தான் இருக்கும் என்று எண்ணி, தேவையில்லாமல் பயப்பட வேண்டிய அவசியமும் இல்லை.

நடைமுறையில் பெரும்பாலான நெஞ்சு வலிக்கு இதய நோய்கள் காரணமாக இருக்காது; வேறு காரணங்கள்தான் இருக்கும்.

மாரடைப்பு அல்லது ஹார்ட் அட்டாக் என்றால் என்ன?

இதய தசைகளுக்கும் தேவையான உணவையும், ஆக்சிஜனையும் எடுத்துச் செல்ல மூன்று முக்கிய ரத்தக்குழாய்கள் உள்ளன.

இவை ஒவ்வொன்றும் இதயத்தின் வெவ்வேறு பாகங்களுக்கு ஆக்சிஜன் கலந்த ரத்தத்தை எடுத்து செல்கின்றன.

இந்த ரத்தக்குழாய்களின் ரத்த ஓட்டத்திற்கு தடையாக முதலில் சிறியதாக தடைக்கற்கள் போல அடைப்புகள் ஏற்படுகின்றன.

சில காரணங்களால் இத்தடை கற்கள் பெரிதாகி உடைந்து, அதன்மேல் ரத்தம் உறைந்து ரத்தக்குழாயை முழுமையாக அடைத்து விடுகிறது.

இதனால் இந்த இரத்தக் குளாய் மூலம் ரத்தத்தைப் பெறும் இதயத்தின் தசைப் பகுதி ஆக்ஸிஜனையும் ஊட்டச் சத்துகளும் கிடைக்கப் பெறாததால் செயலிழக்கிறது. இதுவே மாரடைப்பு.

மாரடைப்பின் அறிகுறிகள் என்ன – ஹார்ட் அட்டாக் அறிகுறிகள்

மாரடைப்பு ஏற்படுகிறவர்களுக்கு மார்பில் தாங்க முடியாத வலி ஏற்படும். சில நேரங்களில் பெரும் பாரம் ஒன்று அழுத்துவது போன்றதொரு உணர்வு மேலோங்கும்.

சிலருக்கு திடீரென்று நெஞ்சு முழுவதும் கயிறு கட்டி அழுத்துவதுபோல் கடுமையாக வலிக்கும்.

அதிகமாக வியர்க்கும், குமட்டல் ஏற்படும். பொதுவாக இந்த வலி நடு நெஞ்சில் ஏற்படக்கூடும். பின்னர் மெல்ல நகர்ந்து இடது கை, தோல்பட்டை பகுதியிலும் அப்படியே முதுகுப் பக்கமும் வலி பரவிடும்.

இந்த வலி தாடை, கழுத்து, இடது புஜம், இடது கை விரல்களுக்குப் பரவும். உடல் அதிகமாக வியர்க்கும்.

சிலருக்கு பற்கள், தாடை பகுதியிலும் வலி இருக்கும். தொடர்ந்து ஒரே மாதிரியான வலி இருக்காது, ஐந்து நிமிடங்களுக்கு மேல் இவை நீடிக்காது. அதற்குள்ளாகவே வலி இருக்கும்.

முழங்கால் வலிக்கு என்ன தீர்வு? ஒரு வாரத்தில் குணமாக மருந்து

இந்த வலி எடுத்தவுடனேயே உங்கள் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படாது.

ஓய்வெடுத்தாலும் வலி குறையாது. நேரம் ஆக ஆக வலி கூடிக்கொண்டே போகும். மூச்சுத்திணறல், மூச்சு விடுவதில் சிரமம் உண்டாகும். மயக்கம் வரும்.

அதேவேளை மாரடைப்பு வந்தால் நெஞ்சு வலிதான் வரும் என்றில்லை. சிலருக்கு இடது புற தோள் பட்டை பகுதியில் வலியை கொடுக்கும். கழுத்து பகுதி, தொண்டை பகுதிகளில் இறுக்கம் தெரியும்.

மூச்சுத் திணறல், வாந்தி, அதிகமாக வியர்த்தல், சிலருக்கு நெஞ்சு பகுதியிலிருந்து பின்புறம் வரை வலி இருக்கும்.

இவையெல்லாம் மாரடைப்பின் அறிகுறிகள் அல்லது ஹார்ட் அட்டாக் அறிகுறிகள் ஆகும். இதுதான் மாரடைப்பு.

ஹார்ட் அட்டாக் வர காரணம் என்ன? ஹார்ட் அட்டாக் எதனால் வருகிறது?

அதிகமான வேலைப் பளுவின் காரணமாக நிறைய பேர் மன அழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். மன அழுத்தம் ஏற்படும் போது இதயத்திற்கு அதிகமான அழுத்தம் ஏற்பட்டு, இதயத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படும்.

இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தாலும், இதயம் பாதிக்கப்படும். ஏனென்றால் நீரிழிவும் ஒரு வகையில் இதய நோயை உண்டாக்கும். அதிலும் குறிப்பாக ஆண்களை விட பெண்களுக்கு பெரிய அளவில் ஆபத்தை விரைவில் ஏற்படுத்தும்.

அதேபோல் இதய ஆரோக்கியத்தை கெடுப்பதில் அதிக உடல் எடையும் முக்கிய பங்கு வகிக்கிறது.

சொல்லப்போனால், தற்போது மாரடைப்பு வருபவர்களின் உடலைப் பார்த்தால், அவர்களது உடல் எடையானது, அளவுக்கு அதிகமாக இருக்கும். எனவே உடல் எடையில் கவனமாக இருக்க வேண்டும்.

இதயத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் செயல்களில் புகைப்பிடிப்பது முக்கியமான ஒன்று. ஏனெனில் சிகரெட்டில் இருக்கும் புகையிலையானது, இதயத்தின் ஆரோக்கியத்தை கெடுக்கும் பொருட்களில் ஒன்று. எனவே புகைப்பிடிப்பதால் மாரடைப்பு ஏற்படும்.

கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருந்தால், மாரடைப்பு ஏற்படும். கொலஸ்ட்ரால் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடும் போது, அதில் உள்ள கொலஸ்ட்ரால், தமனிகளின் சுவர்களில் அதிகமாக தங்கி, தமனிகளின் அளவை குறைத்து, இரத்த ஓட்டத்தை தடுக்கும்.

ஹார்ட் அட்டாக் வர காரணம் என்ன? ஹார்ட் அட்டாக் எதனால் வருகிறது என்று நோக்கினால் மேலே கூறப்பட்ட காரணங்களை கூறலாம்.

யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும்

யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும் என்று பார்த்தால், புகைபிடிப்போர், மது அருந்துவோர், உயர் ரத்த அழுத்தம், ரத்த மிகைக் கொழுப்பு, நீரிழிவு நோய், இதயத் தசை அழற்சி போன்ற நோய்களைக் கொண்டவர்கள்.

அதேபோல் உடற்பயிற்சி இல்லாதவர்கள், உடலுழைப்பே இல்லாதவர்கள், ஓய்வின்றிக் கடுமையாக உழைப்பவர்கள், பரபரப்பான வாழ்க்கை முறையைக் கையாள்கிறவர்கள், முதியோர் ஆகியோருக்கு இந்த வகையான மாரடைப்பு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புண்டு.

மாரடைப்பு வராமல் தடுக்க வழிகள் – ஹார்ட் அட்டாக் வராமல் தடுப்பது எப்படி?

தினமும் உடற்பயிற்சி செய்வது மிகவும் அவசியமான ஒரு செயல்களில் ஒன்று. ஏனெனில் தினமும் குறைந்தது 30 நிமிடம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதனால் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.

மனஅழுத்தம் ஏற்படும் போது, அதனை குறைக்க தியானம், மூச்சு விடும் பயிற்சி போன்ற மனதை ரிலாக்ஸ் செய்யும் பயிற்சிகளை செய்து வந்தால், இதயத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கலாம்.

இவ்வாறு செய்யும் போது உடலில் இரத்த ஓட்டமானது சீராக அனைத்து உறுப்புகளுக்கும் பாயும்.

அதேபோல து அருந்துதல், புகை பிடித்தல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். மது மற்றும் புகைப்பிடிப்பதை தவிர்த்தால், இதய நோய் வராமல் தடுக்கலாம்.

நாள் ஒன்றுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்ய வேண்டும். அதிகமாக தண்ணீர் குடிக்கும்போது நுரையீரல் செயல்பாடுகள் நன்றாக இருக்கும். இது இதய நோய் ஏற்படுவதைக் குறைக்கும்.

உடலில் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு சரியாக இருக்க வேண்டும். அதேபோல தினமும் 8 மணி நேரம் நல்ல தூக்கம் வேண்டும்.

நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி, நீச்சல் அல்லது சைக்ளிங் பயிற்சி மேற்கொள்வது உடலுக்கு ஆரோக்கியம் மட்டுமல்லாமல் அது ஊட்டமாகவும் உடலில் செயல்படுகிறது.

மாரடைப்பை தடுக்கும் உணவுகள் – மாரடைப்பு வராமல் இருக்க

கட்டுப்பாடான உணவால் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

அரிசி, சர்க்கரை, கொழுப்பு, எண்ணெய் ஆகியவை உடலுக்கு சக்தி தரக்கூடிய உணவுகள். ஆனால், அதிக அரிசி உணவு, உடல் எடையைக் கூட்டும். அதிக சர்க்கரையும் உடலுக்கு நல்லதல்ல.

அதனால், அரிசியையும் சர்க்கரையையும் குறைத்துக் கொண்டு, காய்கறி மற்றும் கீரை வகைகளை அதிகமாக சாப்பிட வேண்டும்.

காய்கறிகள், கீரை, பழங்கள் ஆகியன பாதுகாப்பான உணவுகள். அத்துடன் எப்போதும் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

கொழுப்பு அதிகமுள்ள உணவுகளை, எண்ணெய்யில் பொரித்த உணவுகளைத் தவிர்த்துவிட வேண்டும்.

அதேபோல உப்பு, இனிப்பு அதிகமுள்ள உணவுகளை சேர்க்கக்கூடாது.

புரதச்சத்து நிறைந்த பீன்ஸ், மாரடைப்பு வருவதற்கான பாதிப்பை குறைக்கின்றன.

பாதாம் ஒரு ஊட்டச்சத்து நிறைந்த கொட்டை வகைகளில் ஒன்றாகும். இதய ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் களஞ்சியமாக பாதாம் உள்ளது.

பூண்டு பல நூற்றாண்டுகளாக பல்வேறு நோய்களுக்கு இயற்கை தீர்வாக பயன்படுத்தப்படுகிறது. பூண்டு இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் என்று ஆராய்ச்சி காட்டுகிறது.

இது இரத்த உறைவு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும்.

ஆகவே இதுபோன்ற உணவு பழக்கமுறை மாரடைப்பு வராமல் தடுக்க உதவும்.