உள்ளுராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடல்!


உள்ளுராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடல்!

உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான அஞ்சல் மூல

மாவட்ட பிரதித் தேர்தல்கள் ஆணையாளர்களும், உதவித் தேர்தல்கள் ஆணையாளர்களும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இன்று அழைக்கப்பட்டுள்ளனர்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பான தெளிவூட்டல்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பணிகளுக்காக அவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

இதன்போது, உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான அடிப்படை விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை உரியவாறு நடத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு உயர்நீதிமன்றில் நேற்று மீண்டும் வாக்குறுதி வழங்கியது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தரவிடுமாறு கோரி, சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாக்கல் செய்திருந்த இரண்டு மனுக்கள் நேற்று விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது, தேர்தல்கள் ஆணைக்குழு இந்த உறுதிப்பாட்டை வழங்கியது.