மீண்டும் இருளில் மூழ்கப்போகும் நாடு – எச்சரிக்கை


மீண்டும் இருளில் மூழ்கப்போகும் நாடு – எச்சரிக்கை

எரிபொருள் சிக்கல் மத்தியில் மீண்டும் ஒரு முறை நாட்டில் மின்சாரம் துண்டிப்பு ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபை எதிர்வு கூறியுள்ளது.

டீசல் கிடைக்காமையால் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தற்போது மூடப்பட்டுள்ளதாக அந்த சபை குறிப்பிட்டுள்ளது.

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் நேற்றைய இரண்டாவது தடவையாக மூடப்பட்ட போதும், சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் தற்போது பயன்படுத்தப்படுகின்றது.

எவ்வாறாயினும், சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை கொண்டு வந்த கப்பலின் எரிபொருளை தரையிறக்குவதற்கான நாணய கடிதத்தை பெறுவதில் டொலர் நெருக்கடி காரணமாக சிக்கல் ஏற்பட்டுள்ளது.

எனினும், கடந்த 3 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை அண்மித்த எரிபொருளை தரையிறக்கும் செயற்பாடு முத்துராஜவெலயில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு துறைமுகத்தின் பிரதானி நிர்மால் சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கை மின்சார சபையின் அனல் மின்நிலையங்களில் எரிபொருளுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக எமது செய்தி சேவைக்கு தகவல் கிடைக்க பெற்றது.

இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போது, மின்னுற்பத்தி நிலையங்களில் இன்னும் சில நாட்களுக்கான எரிபொருள் மாத்திரமே இருக்கின்றமை கண்டறியப்பட்டுள்ளது.