மேலும் இரண்டு கட்டணங்களை அதிகரிக்க இரகசிய பேச்சுவார்த்தை?


மேலும் இரண்டு கட்டணங்களை அதிகரிக்க இரகசிய பேச்சுவார்த்தை?

மின்சாரம் மற்றும் தண்ணீர் ஆகிய இரண்டுக்கான கட்டணங்களை அதிகரிப்பதற்கு அரசாங்கம் இரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதென தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், மின்சார கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் இதுவரையிலும் எவ்விதமான தீர்மானமும் எட்டப்படவில்லையென மின்சக்தி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

“மின்சாரக் கட்டணம் அதிகரிக்குமாயின், தண்ணீர் கட்டணத்தையும் அதிகரிப்பதற்கு கவனம் செலுத்தப்படுமென நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

அதிகரிக்கப்படும் கட்டணங்களை, குறைந்த பாவனையாளர்களிடம் இருந்து அறவிடாது. கூடுதலாக பயன்படுத்துவோரிடமிருந்து அறவிடும் வகையில், கட்டணங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுமென அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

மேலும் இன்றைய தமிழ் செய்திகள்