மின்சார சபைக்கு மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு தீர்மானம்

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


மின்சார சபைக்கு மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு தீர்மானம்

100 மெகாவோட் மின்சாரத்தை தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து கொள்வனவு செய்ய இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் வாரங்களில் குறித்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திடவுள்ளதாக மின் சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஒரு வருட காலப் பகுதிக்கு குறித்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படவுள்ளது.

எம்பிலிபிடிய பகுதியிலுள்ள இந்த தனியார் டீசல் மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து, முன்னர் இலங்கை மின்சார சபையால் மின்சாரம் கொள்வனவு செய்யப்பட்டது. பின்னர் குறித்த ஒப்பந்தம் இரத்துச் செய்யப்பட்டது.

நிலவும் மின் கேள்விக்கு அமைய மீண்டும் ஒப்பந்த அடிப்படையில் மின்சாரத்தை கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளதாக, மின் சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்படி எதிர்வரும் திங்கட்கிழமை அந்த மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து 35 மெகாவோட் மின்சாரம் முதற் கட்டமாக தேசிய மின்கட்டமைப்பில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளது.