மின்சார வாகனங்கள் இறக்குமதி தொடர்பில் ஜனாதிபதியின் அறிவிப்பு


மின்சார வாகனங்கள் இறக்குமதி தொடர்பில் ஜனாதிபதியின் அறிவிப்பு

இலங்கைக்கான வாகன இறக்குமதியில் மின்சார வாகனங்கள் இறக்குமதிக்கு முன்னுரிமை வழங்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று அரசாங்கத்தின் கொள்கை உரை நிகழ்த்திய ஜனாதிபதி இந்தத் தகவலை வெளியிட்டார்.

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படுகின்ற எண்ணெய்யில் 70 சதவீதம் வாகனங்களுக்காகவே பயன்படுத்தப்படுகிறது.

மின்னுற்பத்திக்காக 21 சதவீதமும், கைத்தொழில் துறைக்காக 4 சதவீதமும் பயன்படுகிறது.

இவ்வாறான நிலையில் எதிர்காலத்தில் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படும் போது, மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை இறக்குமதி செய்ய அதிக முன்னுரிமை வழங்கப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.