மின்வெட்டு தொடர்பான புதிய அறிவிப்பு


மின்வெட்டு தொடர்பான புதிய அறிவிப்பு

மறு அறிவித்தல் வரையிலும் ஒவ்வொருநாளும் ஒரு மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

வலய ரீதியாக இன்று (12) மாலை 5.30 தொடக்கம் இரவு 9.30 வரையான காலப்பகுதியில், சுமார் ஒரு மணிநேரத்திற்கு மின் வெட்டு அமுலாக்கும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும் நேற்று மின் வெட்டு துண்டிக்கப்பட மாட்டாது என மின்சக்தி அமைச்சு அறிவித்திருந்தது.

இருப்பினும் தேசிய மின்கட்டமைப்புக்கு மின்சாரம் வழங்கும் தனியார் மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே மின்சார துண்டிப்பு நேற்று இடம்பெற்றது.

இதன்படி வத்தளை, கல்கிஸை, இரத்மலானை, மஹரகம, பொரலஸ்கமுவ, நுகேகொடை, அக்குரஸ்ஸ, பிபில, கெக்கிராவ, மாலபே போன்ற பகுதிகளில் மின்சார துண்டிப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் வலய ரீதியாக இன்று சுமார் ஒரு மணிநேரத்திற்கு மின் வெட்டு அமுலாக்கும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.