மிரட்டும் இங்கிலாந்து : இரண்டாவது போட்டியிலும் தடுமாறுகிறது இலங்கை அணி

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


மிரட்டும் இங்கிலாந்து : இரண்டாவது போட்டியிலும் தடுமாறுகிறது இலங்கை அணி

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி “பாலோ-ஆன்” பெற்றுள்ள நிலையில் தோல்வியைத் தவிர்க்க போராடி வருகிறது.

இங்கிலாந்து- இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட்போட்டி செஸ்டர்-லீ-ஸ்டிரிட்டில் நடக்கிறது.

இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி மொயீன் அலி (155), ஹால்ஸ்(83), ரூட் (80) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 9 விக்கெட்டுக்கு 498 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி மோசமாக துடுப்பெடுத்தாடியது. இதனால் 101 ஓட்டங்களுக்கு சுருண்டு “பாலோ- ஆன்” பெற்றது.

மெண்டிஸ் மட்டும் 35 ஓட்டங்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி சார்பில் ஆண்டர்சன், வோக்ஸ் தலா 3, பிராட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

“பாலோ- ஆன்” பெற்ற இலங்கை அணி 2வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்கள் கருணாரத்னே(26), சில்வா (60) நல்ல தொடக்க கொடுத்தனர். அடுத்து வந்த மெண்டிஸ் (26), திரிமன்னே (13) நிலைக்கவில்லை.

அணித்தலைவர் மேத்யூஸ் (80) அரைசதம் கடந்து நம்பிக்கை அளித்தார். சந்திமால் தன் பங்கிற்கு அரைசதம் விளாசினார்.

3வது நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 5 விக்கெட்டுக்கு 309 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

சந்திமால் 54 ஓட்டங்களுடனும், சிறிவர்த்தனே 35 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். தற்போது 88 ஓட்டங்கள் பின்னடைவில் இருக்கும் இலங்கை அணி தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது.