மீண்டும் அனுஷ்காவுடன் இணைந்த விராட் கோஹ்லி

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


மீண்டும் அனுஷ்காவுடன் இணைந்த விராட் கோஹ்லி

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திர வீரர் வீராட் கோலி. இவரும் இந்தி நடிகையான அனுஷ்கா சர்மாவும் தீவிரமாக காதலித்தனர். வீராட் கோலி வெளிநாடு சுற்றுப்பயணம் சென்ற போது அனுஷ்காவும் சென்றார்.

கடந்த 50 ஓவர் உலக கிண்ண (2015) அரை இறுதியில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா விளையாடியது. இந்த போட்டியை பார்க்க அனுஷ்கா அவுஸ்திரேலியா சென்றார்.

இதில் வீராட் கோலி சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இதற்கு அனுஷ்கா சர்மாதான் காரணம் என கூறி ரசிகர்கள் அவரை டுவிட்டரில் வறுத்தெடுத்தனர். இதற்கிடையே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.

தற்போது நடந்து வரும் 20 ஓவர் உலக கிண்ணத்தில் கோலியின் ஆட்டம் அபாரமாக இருந்து வருகிறது. பாகிஸ்தான் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.

இதை பாராட்டி ரசிகர்கள் இனிமேல் அனுஷ்கா சர்மா, வீராட் கோலியை தொந்தரவு செய்யாமல் இருந்தால் நல்லது என்று டுவிட்டரில் தெரிவித்து இருந்தனர். இதனால் கோபமடைந்த கோலி, இது வெட்கக்கேடானது என்று கண்டனம் தெரிவித்தார்.

இந்த நிலையில் அனுஷ்கா சர்மாவுடன் செல்போனில் பேசி உள்ளார். அப்போது இருவரும் மனம் விட்டு பேசியதாக தெரிகிறது. அவுஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றியை நள்ளிரவில் கொண்டாடிய போது கோலி, அனுஷ்கா சர்மாவுடன் பேசி இருக்கிறார்.

இதனால் இருவருக்கும் மீண்டும் காதல் மலர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.