மீண்டும் முத்திரை பதித்த பெல்ப்ஸ்: ஒலிம்பிக்கில் 21 தங்கம் வென்று சாதனை

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


மீண்டும் முத்திரை பதித்த பெல்ப்ஸ்: ஒலிம்பிக்கில் 21 தங்கம் வென்று சாதனை

ஒலிம்பிக்கின் “தங்க வேட்டை நாயகன்” என்று அழைப்படும் மைக்கேல் பெல்ப்ஸ் தற்போது ரியோ ஒலிம்பிக்கில் மேலும் 2 தங்கம் வென்று தனது தங்க பதக்க வேட்டையை 21 ஆக உயர்த்தியுள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த மைக்கேல் பெல்ப்ஸ், நீச்சல் வீரரான இவர் ஒலிம்பிக்கில் அதிக தங்கம் (18), அதிக பதக்கம் (22) வென்று சாதனை வீரராக இருந்தார்.

இந்நிலையில் நேற்று முன் தினம் நடந்த 4*100 மீ தொடர் நீச்சல் பந்தயத்தில் அமெரிக்க அணி தங்கம் வென்றது.

அமெரிக்க அணி பந்தய தூரத்தை 30 நிமிடம் 09.02 வினாடியில் கடந்தது. 4 பேர் கொண்ட அந்த அணியில் 31 வயதான பெல்ப்சும் இடம் பெற்றிருந்தார்.

இதன் மூலம் அவரது தங்க பதக்கங்களின் எண்ணிக்கை 19 ஆகவும், மொத்த பதக்கம் 23 பதக்கம் (19 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம்) ஆகவும் உயர்ந்து இருந்தது.

இந்த நிலையில் இன்று நடந்த நீச்சல் பந்தயத்தில் பெல்ப்ஸ் மேலும் 2 தங்கம் வென்றார்.

200 மீட்டர் பட்டர்பிளை பிரிவில் அவர் 1 நிமிடம் 53.40 வினாடியில் தூரத்தை கடந்து முதலிடத்தை பிடித்து தங்கம் வென்றார். இதைத் தொடர்ந்து நடந்த 4×200 மீற்றர்தொடர் பிரிஸ்டைலிலும் தங்கம் வென்றார்.

சோனர் டையர், டவுன்லி, ஹாஸ், ரியான் லாச்செட் மைக்கேல் பெல்ப்ஸ் ஆகியோர் அடங்கிய அமெரிக்க அணி பந்தய தூரத்தை 7 நிமிடம் 00.66 வினாடியில் கடந்தது.

இன்று பெற்ற 2 தங்கம் மூலம் ஒலிம்பிக் போட்டியில் பெல்ப்ஸ் வென்ற தங்கத்தின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்தது.

ஒட்டுமொத்தமாக ஒலிம்பிக்கில் 25 பதக்கம் வென்று முத்திரை பதித்து இருக்கிறார். அவரை யாரும் நெருங்க முடியாத அளவுக்கு உச்சத்தில் இருக்கிறார்.

பெல்ப்சுக்கு இந்த ஒலிம்பிக் போட்டியில் மேலும் 2 போட்டிகள் (4×100 மீட்டர் மெட்லி, 200 மீட்டர் தனிநபர் மெட்லி) இருப்பதால் அவரது தங்கம் எண்ணிக்கை மேலும் உயரலாம்