முட்டையில் உள்ள சத்துக்கள் ஏனைய உணவுகளை விட அதிகமானது. முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்று பார்த்தால் உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்த முட்டை மிகவும் இன்றியமையானது.
உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த எத்தனை உணவுப் பொருட்கள் இருந்தாலும், முட்டைக்கு இணையாக எதுவும் வர முடியாது.
ஏனெனில் முட்டையில் அந்த அளவில் சத்துக்களானது நிறைந்துள்ளது.
அதேபோல் குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு உணவு வகைதான் முட்டை.
ஆனால் தினமும் முட்டை சாப்பிடலாமா? ஒரு நாளைக்கு எத்தனை முட்டை சாப்பிடலாம்? முட்டை சாப்பிடுவதால் என்ன தீமைகள் ஏற்படும்? முட்டை சாப்பிடுவது நல்லதா கெட்டதா? என்றெல்லாம் பல கேள்விகள் நம்மில் உள்ளன.
முட்டை ஒரு முழுமையான சத்து நிறைந்த உணவு. முட்டையில் அதிக அளவு புரோட்டின், வைட்டமின், மினரல், மற்றும் நல்ல கொழுப்பு ஆகியவைகளைக் கொண்டுள்ளது.
சரி இந்தப் பதிவில் முட்டை சாப்பிட்டால் என்ன நன்மை? முட்டை சாப்பிடுவது நல்லதா? ஒரு நாளைக்கு எத்தனை முட்டை சாப்பிடலாம்? என்பது பற்றி அலசுவோம்
ஒரு முட்டையில் உள்ள சத்துக்கள் – முட்டையில் உள்ள வைட்டமின்
முட்டையில் என்ன சத்து இருக்கு என்று பார்த்தால், முட்டையில் புரதம் ரிபோப்லாவின், போலேட், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், செலினியம், மக்னீசியம், விட்டமின் A, E மற்றும் B6 அதிகமாக காணப்படுகிறது.
அதேபோல் எலும்பின் ஆரோக்கியத்திற்கு தேவையான விட்டமின் D மற்றும் கால்சியம் சத்துக்கள் அதிகமாக இருக்கிறது.
முட்டை லுடீன் மற்றும் ஸீக்ஸாக்தைன் ஆகிய கரோட்டினாய்டு பொருட்களை அதிகமாக கொண்டுள்ளது.
முட்டையில் உள்ள கோலைன் என்ற பொருள் நரம்பு மண்டலம் மற்றும் இதய நரம்பு மண்டலத்தின் பிரச்சனைகளைக் குறைத்து, மூளையின் செயல்பாட்டை சிறப்பாக இயக்குவதற்கு உதவுகிறது.
முட்டையில் புரோட்டீன் மற்றும் மற்ற அத்தியாவசிய சத்துக்கள், குறைவான கலோரியும் ஆகியவை உள்ளது.
தக்காளி சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா?
மொத்தமாக முழு முட்டையிலும், வைட்டமின் ஏ, பி12, பி2, பி5, ஈ ஆகிய வைட்டமின்களும், செலினியம், ஜிங்க், பொட்டாசியம், ஃபோலேட் என்கின்ற மினரல்களும், உள்ளன.
இதன் கலோரி அளவு-77, கொழுப்பு-5கிராம், புரோட்டின்-6 கிராம் ஆகிய சத்துக்களை ஒரு முழு முட்டை உள்ளடக்கியது.
அதுமட்டுமின்றி மற்ற உணவுப் பொருட்களில் இல்லாத கோலைன் என்ற சிறப்பான பொருள் முட்டையில் அடங்கியுள்ளது.
ஆனால் முட்டையில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக உள்ளது தான். சந்தேகமேயில்லை.
சாதாரணமாக ஒரு முட்டையில் உள்ள சத்துக்கள் வைட்டமின் அளவு என்பவற்றை நாம் சுருக்கமாகவாவது தெரிந்திருப்பது நல்லது.
முட்டை சாப்பிடுவது நல்லதா? தினமும் முட்டை சாப்பிடலாமா? முட்டையில் என்ன சத்து இருக்கு?
தினமும் முட்டை சாப்பிடலாமா என்று கேட்டால் ஆம் சாப்பிடலாம். முட்டை ஒரு முழுமையான புரதம் மிக்க உணவு. எனவே, இதனை தினமும் சாப்பிடலாம்.
வேகவைத்த முட்டையை தினமும் நாம் எடுத்துக்கொண்டால் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது.
அதேநேரத்தில் முட்டையை வேகவைக்காமல் சாப்பிடுவது தொற்றை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கின்றனர்.
அதாவது ஹாப்-பாயில், அப்படியே குடிப்பதைத் தவிர்க்கவும். மாறாக முட்டையை அவித்தோ, ஆம்லெட் அல்லது பொடி மாஸ் செய்தோ சாப்பிடலாம். அதாவது முழுவதுமாக வேகவைத்து சாப்பிடலாம்.
ஒரு நாளைக்கு எத்தனை முட்டை சாப்பிடலாம்? முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
பெரியவர்கள் நாள் ஒன்றுக்கு 2-3 முட்டை தாராளமாக சாப்பிடலாம்.
உடல் உழைப்பு அதிகமுள்ள வேலைகளில் இருப்பவர்கள் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முட்டை சாப்பிடலாம்.
பொதுவாக முட்டையின் வெள்ளைக்கரு மட்டும் சாப்பிடுவதாக இருந்தால் 3 அல்லது 4 வரை சாப்பிடலாம்.
கணினி முன் அமர்ந்து வேலை செய்பவர்கள் ஒரு நாளைக்கு ஒரு முட்டை எடுத்துக் கொண்டாலே போதும்.
உடல் பருமன் அதிகமாக கொண்டவர்கள் மற்றும் முதியவர்கள் முட்டையின் வெள்ளைக்கருவினை மட்டுமே சாப்பிடுவது நல்லது.
குழந்தைகளுக்கும் தினமும் ஒன்று கொடுக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.
முட்டை சாப்பிட்டால் என்ன நன்மை? முட்டையில் உள்ள சத்துக்கள்
வேகவைத்த முட்டையை தினமும் நாம் எடுத்துக்கொண்டால் புற்றுநோயை தடுக்கக்கூடிய செல்கள் நமது உடலில் அதிகமாக உருவாகிறது. பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோயை தடுக்கும்.
முட்டையை சாப்பிட்டு வருவதால் நமது மூளையானது வேகமாக செயல்பட ஆரம்பித்துவிடும். குறிப்பாக படிக்கும் மாணவர்களுக்கு வேகவைத்த முட்டை கொடுப்பதால் ஞாபக சக்தி அதிகரிக்க வாய்ப்புள்ளது.
காலையில் வெறும் வயிற்றில் வேகவைத்த முட்டையை சாப்பிட்டு வந்தால் ஹார்மோன்கள் பி9 அதிகரித்துவிடும். இதனால் குழந்தையில்லாத தம்பதிகளுக்கு குழந்தையின்மை விரைவில் நீங்கிவிடும்.
உடற்பயிற்சி செய்து விட்டு முட்டை சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் மேலும் தலைமுடி நன்றாக கருகருவென வளரும்.
முட்டையில் எலும்பின் ஆரோக்கியத்திற்கு தேவையான விட்டமின் D மற்றும் கால்சியம் சத்துக்கள் அதிகமாக இருக்கிறது. எனவே இதை தினமும் சாப்பிடுவதால், நம் உடம்பில் உள்ள எலும்புகளின் வலிமை அதிகரிக்கச் செய்கிறது.
பொடுகு தொல்லையில் இருந்து தீர்வு வேண்டுமா? இதோ வழிகள்
முட்டை லுடீன் மற்றும் ஸீக்ஸாக்தைன் ஆகிய கரோட்டினாய்டு பொருட்களை அதிகமாக கொண்டுள்ளதால், இது நமது கண்களின் கருவிழி செயலிழப்பு மற்றும் கண்புரை நோய்களை தடுத்து, கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
கர்ப்பிணிப் பெண்கள் முட்டை சாப்பிடுவதால்… அதில் உள்ள ஃபோலேட் (folate) என்னும் விட்டமின், தாயின் ரத்த விருத்திக்கும், சிசுவின் மூளை வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும்.
தினமும் ஒரு முட்டையினை உண்டு வந்தால் உங்களின் பாலுணர்ச்சி அதிகரிக்கும். மேலும் ஆண்களின் விந்தணு உற்பத்திக்கு புரதம் மிக மிக அவசியம்.
முட்டையில் அதிக அளவு நல்ல கொழுப்பு மற்றும் ஒமேகா-3 கொழுப்பு நிறைந்துள்ளது. இதனால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் அனைத்தும் கரைக்கப்பட்டு உங்கள் ஆரோக்கியத்தினை மேம்படுத்த உதவும்.
எனவே உடல் எடையினை கட்டுக்குள் வைத்திருக்க விரும்புவார்கள் தினமும் ஒரு முட்டையினை உண்டு வரவும்.
இவ்வாறு முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி அடுக்கிக்கொண்டு போகலாம்.
முட்டை வெள்ளை கரு பயன்கள்
முட்டையின் வெள்ளைக்கரு கால்சியம் அதிகளவு கொண்டுள்ளது. அதேபோல் இரும்பு சத்தும் அதிக அளவு காணப்படுகிறது.
எலும்புகளில் ஏற்படக்கூடிய ரிக்கெட்ஸ் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் ஆகிய பிரச்சனைகளை போக்க இந்த வெள்ளை கரு மிகவும் உதவுகிறது.
முட்டையின் வெள்ளை கருவை உண்பதன் மூலமாக இதயத்தில் ஏற்படும் இரத்த உறைவு நீக்கப்படுகிறது. மேலும் முட்டையின் வெள்ளைக் கருவில் உள்ள வைட்டமின் மற்றும் தாதுக்கள் இதயத்துக்கான ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது.
உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் முட்டையின் வெள்ளைக்கருவை அதிகளவு உட்கொள்ளலாம். முட்டையின் வெள்ளை கருவில் கொலஸ்ட்ரால் கிடையாது.
முட்டையின் மஞ்சள் கரு
முட்டையின் வெள்ளைக் கருவைவிட முட்டையின் மஞ்சள் கரு அதிக ஊட்டச்சத்துத்துக்களை கொண்டுள்ளது.
இயற்கையாகவே வைட்டமின் டி அடங்கியிருக்கும் அரிதான உணவுகளில் முட்டையின் மஞ்சள் கருவும் ஒன்று. மஞ்சள்கருவில் புரதமும் கொழுப்பும் நிறைந்துள்ளன.
அந்தவகையில் முட்டையில் கொலஸ்ட்ரால் அடங்கியுள்ளது. ஆம், மஞ்சள் கருவை நீக்கி விட்டால், ஒட்டுமொத்த கொலஸ்ட்ராலும் அதனுடன் சேர்ந்து நீங்கிவிடும்.
வைட்டமின் ஏ, பி, இ, டி மற்றும் கே, அமினோ அமிலங்கள், ஃபோலிக் அமிலம், கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், கொழுப்பு, கோலின், செலினியம், துத்தநாகம் போன்றவை நிரம்பியுள்ளன.
ஒரு முட்டையில் 90 சதவீத கால்சியம் முட்டையின் மஞ்சள் கருவில் தான் உள்ளது. அதே போல் 90 சதவீத இரும்புச்சத்தும் கூட முட்டையின் மஞ்சள் கருவில் தான் உள்ளது.
முட்டையின் தீமைகள் – முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்
முட்டை உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்றதுதான், ஆனால் அளவுக்கு அதிகமான முட்டை நமது ஆரோகியத்துக்கு தீங்கு விளைவிக்கக்கூடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
ஒருநாளில் அதிக முட்டைகளை உட்கொள்வது உங்கள் உடலில் கொலஸ்ட்ராலை அதிகரிக்கும். அதிக முட்டைகளை உட்கொள்ள நினைத்தால், முட்டையின் வெள்ளை பகுதியை மட்டும் சாப்பிட வேண்டும்.
நம் உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது, நம் உடலில் சர்க்கரையின் அளவும் அதிகரிக்கத் தொடங்குகிறது. சர்க்கரை கட்டுப்படுத்தப்படாவிட்டால், ஒரு நபர் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகிறார்.
அதேபோல் முட்டைகளை அதிகமாக உட்கொள்வது உங்கள் உடலில் நீரிழிவு நோய்க்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.
அதிக முட்டைகளை உட்கொள்வதன் மூலம், வயிறு தொடர்பான பிரச்சனைகளை நாம் சந்திக்க வேண்டியிருக்கும். இதன் காரணமாக, வாந்தி, வயிற்று வலி, பிடிப்புகள் போன்ற பிரச்சனைகள் எழுகின்றன.
முட்டை சாப்பிடுவதால் நன்மை தீமைகள் இரண்டும் ஏற்படும் உணவுப் பொருள். ஆகவே முட்டை சாப்பிடுவது நல்லதா கெட்டதா? என்று பார்த்தால் உடல் ஆரோக்கியத்தை பேணும் வகையில் தேவைக்கு ஏற்ப அளவாக பயன்படுத்தினால் நல்லதுதான்.