கோழி இறைச்சி மற்றும் முட்டை விலை குறைப்பு


கோழி இறைச்சி மற்றும் முட்டை விலை குறைப்பு

இறக்குமதி வரியை அரசாங்கம் நீக்கியுள்ள நிலையில், முட்டையின் விலை மேலும் அதிகரிக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ரத்தநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

இதனால், முட்டை உற்பத்தி செலவு குறைந்துள்ளதுடன், இந்த நாட்களில் ஒரு முட்டையொன்றின் விலை 23 ரூபாய் 50 சதத்துக்கு விற்பனை செய்யப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

அத்துடன், கோழி இறைச்சியின் விலையை சுமார் 50 ரூபாயினால் குறைக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது முட்டையொன்று 26 ரூபாய் முதல் 30 ரூபாய்க்கும், ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி 800 ரூபாயிலிருந்து 900 ரூபாய் வரைக்கு விற்பனை செய்யப்படுகின்றது.