முதலில் துடுப்பெடுத்தாடும் இந்தியா

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


முதலில் துடுப்பெடுத்தாடும் இந்தியா

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது.

விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக மேற்கிந்திய தீவுகள் பயணமாகி உள்ளது.

இந்நிலையில் இவ்விரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி ஆண்டிகுவாவில் தொடங்கியது. நாணய சுழற்சியில் வென்ற விராட் கோஹ்லி முதலில் துடுப்பெடுத்தாட முடிவுசெய்தார்.

இந்திய அணி

முரளி விஜய், ஷிகர்தவான், புஜாரா, கோஹ்லி, ரஹானே, சஹா (விக்கெட் காப்பாளர்) அஸ்வின், மிஸ்ரா, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா,முகமது ஷமி.

மேற்கிந்திய தீவுகள் அணி

பிராத்வைட், ராஜேந்திர சந்த்ரிகா,டேரன் பிராவோ, சாமுவேல்ஸ், பிளாக்வுட், சேஸ், டவ்ரிச், கார்லோஸ் பிராத்வைட், ஹோல்டர், பிஷூ, கேப்ரியல்.