முதுகு வலி ஏற்பட காரணங்கள் மற்றும் முதுகு வலி குணமாக வழிகள்


முதுகு வலி ஏற்பட காரணங்கள் மற்றும் முதுகு வலி குணமாக வழிகள்

முதுகு வலி காரணங்கள் என்ன? அதற்கான தீர்வுகள் என்ன என்பது இன்று நம்மில் பலரின் பிரச்சினை. முதுகு வலி சிறியவர் பெரியவர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் வர ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில் நாம் இந்த பதிவில் முதுகு வலி எதனால் வருகிறது அதற்கான காரணம் என்ன என்பதை பற்றி கீழே விரிவாக பார்க்கலாம் வாங்க.

முதுகு வலி காரணங்கள் – முதுகு வலி ஏற்பட காரணம் – முதுகு வலி எதனால் ஏற்படுகிறது

ஒரு சிலருக்கு எப்போதாவது முதுகு வலி வந்தால் அது பிரச்சனை அல்ல. ஆனால் ஒரு சிலருக்கு ஊட்காருவதில், படுப்பதில் மற்றும் நிமிரமுடியாத அளவிற்கு இருந்தால் அது கண்டிப்பாக கவனிக்க வேண்டிய விஷயம் தான்.

நமது முதுகு எலும்புகள், தசைகள், வட்டுகள், தசைநாண்கள் மற்றும் தசைநார்கள் ஆகியவற்றின் சிக்கலான கட்டமைப்பைக் கொண்டுள்ளது.

அவை நம் உடலை ஆதரிக்கவும், நம்மை சுற்றி செல்லவும் உதவுகின்றன. முதுகு வலி ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும், சில சந்தர்ப்பங்களில் முதுகு வலிக்கான காரணம் தெளிவாக இல்லை.

முதுகுவலி முக்கியமாக பதற்றம், வட்டு அறுவை சிகிச்சை, திரிபு அல்லது காயம் ஆகியவற்றால் ஏற்படுகிறது.

கேரட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்; கேரட்டில் உள்ள சத்துக்கள்

முழங்கால் வலிக்கு என்ன தீர்வு? ஒரு வாரத்தில் குணமாக மருந்து

கூடுதலாக, நமது முதுகெலும்பு பகுதிகள் வட்டுகள், குருத்தெலும்பு போன்ற பட்டைகள் மூலம் மெத்தையாக உள்ளன.

இந்த கூறுகளில் ஏதேனும் சிக்கல்கள் முதுகுவலியை ஏற்படுத்தும். வட்டுக்கு சேதம் ஏற்படுவது மருத்துவ நிலைமைகள், மோசமான தோரணை உள்ளிட்ட பிறவற்றின் விளைவாக இருக்கலாம்.

ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற முதுகுத்தண்டில் ஏற்படும் பிரச்சனைகளும் முதுகு வலிக்கு வழிவகுக்கும்.

வயதானவர்களுக்கு கண்டிப்பாக முதுகுவலி இருக்கும். அதற்கான காரணம் முதுகெலும்பில் நீர்ச்சத்து குறைந்து விடுவது மற்றும் எலும்பின் வளர்ச்சிக்கு முக்கியமான கால்சியத்தின் அளவு குறைந்து விடுவதால் கீழ் முதுகில் வலியை ஏற்படுத்தும்.

கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் குழந்தையை சுமப்பதனால் இந்த முதுகு வலி வருவதற்கான வாய்ப்பு உள்ளது.

சிறு வயதினருக்கு முகுகு வலி வருவதற்கு அவர்களது ஜீனாக கூட இருக்கலாம் அதாவது முதுகு தண்டுவடம் குழந்தை பருவத்திலேயே குறுகலாக இருப்பது.

எவ்வாறாயினும் முதுகு வலி ஏற்பட பொதுவான காரணங்கள் என்று பார்த்தால் தசைப்பிடிப்பு, வட்டு குடலிறக்கம், தசை இறுக்கம், இடுப்பு மூட்டுவலி மற்றும் வீழ்ச்சி, எலும்பு முறிவு அல்லது காயங்கள், இறுக்கமான தசைநார்கள் அல்லது தசைகள் சேதமடைந்த வட்டுகள் என்பவற்ற கூறலாம்.

முதுகு வலிக்கு என்ன செய்ய வேண்டும்? முதுகு வலிக்கு நாட்டு மருந்து – முதுகு வலி குணமாக

நீங்கள் முதுகுவலியைத் தவிர்க்கலாம். அத்துடன் சரியான உடல் இயக்கவியல் பயிற்சி மற்றும் உங்கள் உடல் நிலையை மேம்படுத்துவதன் மூலம் அது மீண்டும் வருவதைத் தடுக்கலாம்.

ஒரு பாத்திரத்தில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றுங்கள் பின் அவற்றில் 5 மிளகு, 5 கிராம்பு மற்றும் 1 கிராம் சுக்கு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கொதிக்கவைத்து,

பின் அந்த நீரை பருக வேண்டும். இவ்வாறு தினமும் இந்த பானத்தை செய்து அருந்தி வருவதினால் முதுகு வலி குணமாகும்.

முதுகு வலி குணமாக இரண்டு வெற்றிலையை எடுத்து கொள்ளுங்கள் அவற்றை சாறுபிழிந்து, இந்த சாறில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் கலந்து பின் எண்ணெயை சூடுபடுத்த வேண்டும்.

இவ்வாறு சூடுபடுத்திய தேங்காய் எண்ணெயை மிதமான சூட்டில் எடுத்து முதுகு வலி ஏற்படும் இடத்தில் வைத்து நன்றாக தேய்க்க வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து தேய்த்து வந்தால் முதுகு வலி தங்களை விட்டு நீங்கி சென்றுவிடும்.

மேலும் முதுகு வலிக்கு என்ன செய்ய வேண்டும் என்று பார்த்தால் முதுகு வலி உள்ளவர்கள் அடிக்கடி கொள்ளு ரசம் செய்து அருந்தலாம், இதனால் முதுகு வலி குணமாகும்.

அதேபோல் தினமும் உறங்குவதற்கு முன் ஒரு கிளாஸ் பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், நாட்டு சர்க்கரை மற்றும் சிறிதளவு ஏலக்காய் பொடி ஆகியவற்றை சேர்த்து நன்றாக காய்ச்சி பின் பருகிவரலாம். இதனால் முதுகு வலி நீங்கும்.

முதுகு வலி நீங்க எளிய வழிகள் – முதுகு வலி குணமடைய டிப்ஸ்

குளிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் உங்கள் முதுகில் கடுகு எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யவும். பின்னர், வெந்நீரில் குளிக்கவும்.

ஆமணக்கு எண்ணெயை (விளக்கெண்ணெய்) சூடாக்கி, உங்கள் முதுகில் மசாஜ் செய்யவேண்டும். அதை இரவு முழுவதும் அப்படியே விடவும்.

சூடான நல்லெண்ணை மற்றும் உப்பு சேர்த்து முதுகில் மசாஜ் செய்தால் வலி குறையும். மசாஜ் அழுத்தி செய்யாமல், மிதமாகச் செய்யவும்.

வீட்டில் தேநீர் தயாரிக்கும் போது இஞ்சியைச் சேர்த்து தயாரிக்கவும், இது முதுகுவலியின் வாய்ப்புகளைக் குறைக்க உதவும்

உங்கள் முதுகில் மசாஜ் செய்ய மூலிகை எண்ணெயைப் பயன்படுத்துவதும் விரைவாக முதுகு வலி குணமடைய (Home remedies for fast back pain relief) வழிவகை செய்யும்.

கொள்ளு ரசம் வைத்து குடிக்க இடுப்பு வலி பறந்து போகும். உடல் பருமனாக உள்ளவர்கள் கொள்ளை வாரம் மூன்று முறை சேர்க்க உடல் தசைகள் இறுகி, ஒரு ஆரோக்கியமான உடல் வாகை பெற முடியும். இது உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றுகிறது.

கேழ்வரகு மாவை ஒரு காட்டன் துணியில் கட்டி, அடுப்பில் வெறும் மண் பானையை வைத்து சூடாக்கி, அதில் அந்த மாவு துணியை சூடாக்கி அதை முதுகில் மற்றும் கழுத்தில் வலி இருக்கும் இடத்தில் வைத்து ஒத்தடம் கொடுத்தல் வலி குறையும்.

முதுகு வலி நீங்க உணவு – முதுகு வலிக்கு என்ன சாப்பிடலாம்

காபியில் உள்ள காப்ஃபைன் முதுகு வலியைக் குறைக்கும் மற்றும் மீண்டும் அப்பிரச்சனையே வராமல் தடுக்கும்.

ஏனெனில் காபி பீன்ஸில் உட்காயங்களால் ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்கும் மாயாஜால உட்பொருட்கள் உள்ளன.

எனவே உங்களுக்கு முதுகு வலிப்பது போன்று இருந்தால், ஒரு கப் காபியைக் குடியுங்கள்.

அதேபோல் சிவப்பு திராட்சையில் உடலின் அனைத்து பகுதிகளிலும் ஏற்படும் வலியைப் போக்கும் திறன் இருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த பழத்தில் உள்ள சக்தி வாய்ந்த உட்பொருள், திசு சிதைவைக் குறைக்கும். அதுவும் சிவப்பு திராட்சையால் தயாரிக்கப்படும் ரெட் ஒயின் இதயத்திற்கு மிகவும் நல்லது.

எனவே சிவப்பு திராட்சையை சாப்பிட்டால், இதயத்தில் இரத்த ஓட்டம் சிறப்பாக இருக்கும்.

ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது குளிரினால் ஏற்படும் தாக்கத்தைக் குறைக்கும். மேலும் இது சுவாச தொற்றுக்களையும் சரிசெய்யும்.

இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், மனித உடலுக்கு பலவாறு நன்மை அளிப்பதோடு, பல்வேறு தீவிர நோய்களின் தாக்கத்தையும் தடுக்கும்.

பல் வலி எதனால் வருகிறது? உடனே வலி நீங்க இதை செய்யுங்கள்

கர்ப்பகால மார்பக வலிக்கு காரணம் என்ன? வலி நீங்க என்ன செய்யலாம்

முதுகு மற்றும் மூட்டு வலி உள்ளவர்கள் சோயாவை அன்றாட உணவில் சேர்க்குமாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

ஏனெனில் சோயா புரோட்டீனை தினமும் உட்கொண்டால், அனைத்து வகையான முதுகு மற்றும் மூட்டு வலியும் குறையும்.

முதுகு வலி குணமடைய கேரட் தினமும் கேரட்டை தவறாமல் சாப்பிட்டு வர வேண்டும். ஏனெனில் அதில் உள்ள வைட்டமின் சி, எலும்புகளை வலுவாக்கும்.

கேரட்டும் வலி நிவாரணியாக செயல்பட கூடிய ஆற்றல் கொண்டது.
கேரட் பலவிதமான உடல் உபாதைகளுக்கும் நன்மை தரக்கூடியதாக இருக்கிறது.

கேரட்டை உணவில் தினமும் எடுத்துக் கொள்வது மிகவும் நன்மை.

முதுகு வலி நீங்க உடற்பயிற்சி – முதுகு வலி குணமாக உடற்பயிற்சி

முதுகு வலியால் அவதிப்படுவோர், மூட்டு வலிகள் இல்லாத பட்சத்தில் தரையில் மண்டியிட்டு அவ்வப்போது உட்காருங்கள்,

எப்போதும் இப்படி உட்காருவது சிறந்த முறையாகும். இப்படி உட்கார்ந்த நிலையில், உங்கள் உள்ளங்கயை தரையில் வைத்து நேராக அமர்ந்து உங்கள் முதுகு தண்டை உணருங்கள்.

முதுகு வலி உள்ளவர்களுக்கான அடுத்த பயிற்சி, நாற்காலியில் உட்கார்ந்த நிலையில், மூட்டு மற்றும் கால்களை நேராக வைத்தப்படி கீழே குனிந்து உங்கள் கால் விரல்களை தொட வேண்டும்.

20 எண்ணிக்கைகள் வரை இதே வாக்கில் இருக்கவும். நாள்பட பயிற்சியின் நேரத்தை 2 நிமிடங்கள் வரை செய்யலாம்.

முதுகு வலி நீங்க அல்லது குணமாக இது சிறந்த உடற்பயிற்சி முறையாகும்.