முன்னாள் சபாநாயகர் எம்.எச். மொஹமட் காலமானார்

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


முன்னாள் சபாநாயகர் எம்.எச். மொஹமட் காலமானார்

இலங்கை பாராளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகரும் முன்னாள் அமைச்சருமான எம்.எச். மொஹமட் காலமானதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

அவர் உயிரிழக்கும் போது அவருக்கு வயது 95 ஆகும்.

முன்னதாக கொழும்பு மாநகர சபையின் மேயராக தெரிவு செய்யப்பட்ட அவர், இலங்கையின் முதலாவது முஸ்லிம் மேயராகவும் அறியப்பட்டார்.

இலங்கை பாராளுமன்றத்தின் 14வது சபாநாயகரான அவர், 1989ம் ஆண்டு மார்ச் 09ம் திகதி முதல் 1994ம் ஆண்டு ஜூன் 24ம் திகதி வரை அந்தப் பதவியில் இருந்தார்.

இலங்கை பாராளுமன்றத்தின் முதலாவது முஸ்லிம் சபாநாயகர் என்ற கௌரவமும் அவருக்குறியது.

(அத தெரண)