மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி 143 ஓட்டங்களால் வெற்றி


மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி 143 ஓட்டங்களால் வெற்றி

மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி

மகளிர் ப்ரீமியர் லீக் கிரிக்கட் தொடரில் குஜராத் ஜயன்ட்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய முதலாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 143 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற குஜராத் ஜயன்ட்ஸ் மகளிர் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்தது.

இதன்படி, முதலில் துடுப்பாடிய மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்களை இழந்து 207 ஓட்டங்களைப் பெற்றது.

208 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத்; ஜயன்ட்ஸ் அணி 15.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்களையும் இழந்து 64 ஒட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.

ஏனைய புதிய செய்திகள் – இதையும் பாருங்கள்!

மும்பை இந்தியன்ஸ்