முரளிதரனின் மாற்றம்: வேதனையில் திலங்க சுமதிபால

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


முரளிதரனின் மாற்றம்: வேதனையில் திலங்க சுமதிபால

இலங்கை கிரிக்கெட் சபையின் அனுமதி பெறாமல், அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கு முரளிதரன் பயிற்சியாளராக சென்றுள்ளார்எ ன இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதி பால கூறியுள்ளார்.

அவுஸ்திரேலியா அணி இலங்கையில் சுற்று பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது.

இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாளை இலங்கையில் உள்ள பல்லேகேலி மைதானத்தில் நடைபெற உள்ளது.

இலங்கை அணியின் பந்து வீச்சை எதிர் கொள்ள அவுஸ்திரேலியா அணி,இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தைய முரளிதரனை பந்து வீச்சு பயிற்சியாளராக நியமித்தது.

இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் சங்க சபையின் தலைவர் திலங்க சுமதிபால கூறியதாவது, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் முரளிதரன் தனக்கு ஒரு வாய்ப்பு வந்திருப்பதாகவும்,அதற்காக இலங்கை கிரிக்கெட் சபையின் முகாமையாளர் சரித்சேனாநாயக் அவர்களை திட்டியதாகவும் கூறப்படுகிறது.

மேலும் அவுஸ்திரேலியா அணிக்கு பந்து வீச்சு பயிற்சியாளராக செல்வதற்கு,இலங்கை கிரிக்கெட் சபையிடம் அதற்கான அனுமதி வாங்கவில்லை, இதை பற்றி அவுஸ்திரேலியா கிரிக்கெட் சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் கூறினார்.

தனது தாய்நாடான இலங்கைகு கிரிக்கெட் அணிக்கு எதிராக அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கு பயிற்சி அளிப்பது தனக்கு வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.