முழங்கால் வலிக்கு என்ன தீர்வு? ஒரு வாரத்தில் குணமாக மருந்து


முழங்கால் வலிக்கு என்ன தீர்வு? ஒரு வாரத்தில் குணமாக மருந்து

முழங்கால் வலிக்கு என்ன தீர்வு? அதற்கான காரணம் என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்போம். முழங்கால் வலி என்பது குறிப்பாக பெரியவர்களுக்கு அடிக்கடி ஏற்படும் மருத்துவப் பிரச்சினையாகும்.

பொதுவாக முழங்கால் வலி என்பது 50 வயதைத் தாண்டியவர்கள் எதிர்கொள்ளும் ஒரு பொதுவான பிரச்சினை.

இது முழங்கால் மூட்டின் தொடர் தேய்மானம் மற்றும் கிழிந்ததன் விளைவாக வருகிறது. இதனால் வயதானவர்கள், இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் பாதிக்கப்படலாம்.

அதேபோல் முழங்கால் வலி என்பது வயது காரணமாக இருக்க வேண்டிய அவசியமில்லை.
இது முந்தைய காயம், அதிகப்படியான பயன்பாடு, நோய்த்தொற்றுகள் அல்லது மூட்டுவலி போன்றவற்றாலும் இருக்கலாம்.

ஆகவே முழங்கால் வலி ஏற்பட காரணங்கள் என்ன? முழங்கால் வலிக்கு என்ன பண்ணலாம்? என்பது பற்றி இந்தப் பதிவில் அலசுவோம்.

முழங்கால் வலி காரணங்கள் – முழங்கால் வலி காரணம்

ஒருவருக்கு முழங்கால் வலி வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. சுளுக்கு, எலும்பு முறிவு, காயங்கள் அல்லது ஆர்த்ரிடிஸ் போன்ற தீவிரமான பிரச்சனைகள் காரணமாக முழங்கால் வலி ஏற்படலாம்.

நமது உடலில் நீர் சத்து, சர்க்கரை சத்து மற்றும் உப்பு சத்து குறைவதால் கால் வலி, மூட்டு வலி வருகிறது. வாத நீர் இருந்தாலும் மூட்டு வலி வரும்.

ஒரு சிலர் சர்க்கரை சத்து கூடிவிடும் எனக்கருதி குறைவாக உணவை உண்பதால் சர்க்கரை மற்றும் உப்பு சத்து குறைந்து மூட்டு வலி ஏற்படுகிறது.

அதேபோல் உணவு எடுத்துக்கொண்ட பின் சரியாக நீர் அருந்த வில்லையெனில் நீர் சத்து குறைந்து மூட்டுகளில் வலி ஏற்படுகிறது.

தீராத பல் வலி நீங்க என்ன செய்ய வேண்டும்? 05 நிமிடங்களில் சரியாக மருந்து

தேவையான அளவு நீர் அருந்தி சிறுநீர் நன்கு பிரிந்தால் இந்த நோய் வருவதை தடுக்க முடியும். வாத நீர் மூட்டுக்களில் உள்ள சவ்வுகளை தாக்கி வலிகளை ஏற்படுத்துகிறது.

முழங்கால் வலி படிப்படியாக உருவாகிறது மற்றும் காயம், சிதைந்த தசைநார் அல்லது குருத்தெலும்பு, கீல்வாதம் போன்றவற்றின் விளைவாக கூட ஏற்படலாம்.

இயந்திர காரணங்களைத் தவிர, கீல்வாதம், தொற்று மற்றும் மூட்டு முடக்குவாதம் போன்ற மருத்துவ நிலைகளும் முழங்கால் வலிக்கு வழிவகுக்கும்.

அத்துடன் விஷேடமாக பெண்களுக்கு மாதவிடாய் முடிந்த பின்னர் கால்சியம் சத்து குறைவதால் முட்டு கால் வலி வருகிறது.

பொதுவாக ஆண்களுக்கு உடல்பருமன் காரணமாக உடலின் மொத்த எடையும் கால் பகுதி தாங்குவதால் எளிதில் முட்டுவலி வருகிறது. இது பெண்களுக்கும் பொருந்தும்.

ஆகவே முழங்கால் வலி காரணம் என்று பார்த்தால் இதுபோன்ற பல காரணங்கள் அடுக்கிக்கொண்டு போகலாம்.

முழங்கால் வலிக்கு என்ன பண்ணலாம்? முழங்கால் வலிக்கு என்ன தீர்வு

உங்களை எப்போதும் சூடாகவும் வசதியாகவும் வைத்து இருங்கள். உங்களை எப்போதும் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக வைத்திருங்கள்

உங்க உடம்பை எப்பொழுதும் நீர்ச்சத்துடன் வைத்திருப்பது அவசியம். முழங்கால் வலி நீங்க வழக்கமான உடற்பயிற்சி செய்து உங்க உடல் எடையை ஆரோக்கியமாக பராமரியுங்கள்.

முறையான சுகாதார பராமரிப்பு, உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் போன்றவை முழங்கால் வலி குணமாக வழியமைக்கும்.

மூட்டு வலி குணமாக எண்ணெய்

கற்பூர எண்ணெய் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மற்றும் மூட்டுகளில் உள்ள பதற்றம் மற்றும் வீக்கத்தை நீக்குகிறது.

ஒரு கப் கொதிக்கும் தேங்காய் எண்ணெயில் ஒரு டீஸ்பூன் கற்பூரத் தூள் சேர்க்கவும். எண்ணெய் கொதிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

உங்கள் முழங்கால்களை மசாஜ் செய்வதற்கு எண்ணெயை வைக்கவும் மற்றும் விரும்பிய நன்மைகளை அடைய ஒரு நாளைக்கு இரண்டு முறை தடவவும்.

ஆலிவ் எண்ணெய்யில் ஓலியோகாந்தல் உள்ளது, இது வீக்கத்திலிருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது.

சில தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயை சமைப்பதற்கும் சாலட்டில் இந்த எண்ணெய்யை நீங்கள் பயன்படுத்தி வரலாம். முழங்கால் ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கிறது.

1 கப் தேங்காய் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, அந்த எண்ணெயை வலிமிக்க முழங்கால் பகுதியில் தடவி மசாஜ் செய்து வர, முழங்காலில் இரத்த ஓட்டம் தூண்டிவிடப்பட்டு, முழங்கால் மூட்டு வலி குறையும்.

கடுகு எண்ணெயைக் கொண்டு வலியுள்ள முழங்கால் பகுதியில் தடவி மென்மையாக மசாஜ் செய்தால் மாயம் நிகழும்.

கடுகு எண்ணெய் மசாஜ் மூலம் வலியினால் சந்திக்கும் அசௌகரியத்தில் இருந்து விடுதலை கிடைக்கும்.

ஏனெனில் இந்த மசாஜ் முழங்கால் பகுதியில் இரத்த ஓட்டத்தை தூண்டிவிட்டு, வலி மற்றும் அழற்சியைக் குறைக்கும்.

முழங்கால் வலிக்கு என்ன தீர்வு – முழங்கால் மூட்டு வலி நீங்க உணவுகள்

சீன வைத்தியத்தின் படி, கேரட்டுகள் முழங்கால் மூட்டு வலியில் ஏற்படும் வலியைக் குணப்படுத்துமாம்.

அதற்கு 2 கேரட்டுகளை அரைத்து சாறு எடுத்து, அத்துடன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து குடியுங்கள்.

இதனால் கேரட்டுகள் தசைநார்களின் ஆரோக்கியம் மேம்பட்டு, முழங்கால் மூட்டு வலியும் குறையும்.

முழங்கால் மூட்டு வலி உடனடியாக நீங்க ஓர் எளிய இயற்கை வழி என்றால், தினமும் இரவில் 2 டீஸ்பூன் வெந்தயத்தை நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் நீருடன் வெந்தயத்தை சாப்பிடுங்கள்.

இதனால் மூட்டுக்களில் உள்ள காயங்கள் வேகமாக குணமாகி, வலியில் இருந்தும் விடுபடலாம்.

பூண்டு அழற்சி எதிர்ப்பு மருந்துகள் கொண்ட பொருளாகும். இதில் டயால் டிஸல்பைடு என்ற பொருள் உள்ளது.

இது அழற்சி எதிர்ப்பு விளைவு மற்றும் சைட்டோகைன்களின் விளைவை குறைக்க உதவுகிறது. மூட்டுவலியை குறைக்கிறது.

முட்டை சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா?

தக்காளி சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா?

வெங்காயத்தை அதிகம் சாப்பிடுவதால், அதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகளுடனான பைட்டோ கெமிக்கல்கள், நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையைத் தூண்டும்.

வெங்காயத்தில் உள்ள சல்பர், முழங்கால் மூட்டுக்களில் உள்ள வலியைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

மஞ்சளில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வலியைக் குறைக்க உதவும். மேலும் இது முழங்கால் வலியில் இருந்து உடனடி நிவாரணமும் அளிக்கும்.

அதற்கு 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள், 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி சாறு மற்றும் சிறிது நீர் மூன்றையும் ஒன்றாக கலந்து, 15 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.

பின் அதை இறக்கி குளிர வைத்து, சுவைக்கு தேன் சேர்த்து கலந்து குடிக்கலாம். இல்லாவிட்டால், 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூளை 1 டம்ளர் பாலில் சேர்த்தும் கலந்து குடிக்கலாம்.

இஞ்சி ஏராளமான மருத்துவ குணம் வாய்ந்த பொருள் என்பதால், ஆயுர்வேதத்தில் பல வருடங்களாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் இது எளிதில் கிடைக்கக்கூடிய உணவுப் பொருளும் கூட. இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆரத்ரிடிஸ் அல்லது வயிற்று வலியில் இருந்து நிவாரணம் அளிக்கும்.

எனவே முழங்கால் வலி உள்ளவர்கள், இஞ்சியைக் கொண்டு ஜூஸ் தயாரித்து குடிக்க, நல்ல நிவாரணம் கிடைக்கும்.

ஆப்பிள், கிரான்பெர்ரி மற்றும் பாதாமி பழங்கள் உங்கள் மூட்டு வலிகளைப் போக்க உதவும். இவற்றில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்கள் இருப்பதே முக்கிய காரணம்.

இவை உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ப்ரீ ரேடிக்களில் இருந்து செல்களை பாதுகாக்க உதவுகிறது. அழற்சியை மேலும் குறைக்கிறது.