மூக்கை உடைத்துக்கொண்ட நடிகை…

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


மூக்கை உடைத்துக்கொண்ட நடிகை…

விஜயகாந்துடன் தமிழில் ‘ராஜ்ஜியம்’ திரைப்படத்தில் நடித்தவர் ஷமிதா ஷெட்டி. இவர் புகழ்பெற்ற இந்தி நடிகையான ஷில்பா ஷெட்டியின் தங்கை ஆவார். இவர்தான் பாலிவுட்டில் அறிமுகமான முதல் திரைப்படமான ‘மொஹப்பதேன்’ படத்தில் சிறந்த அறிமுக நடிகைக்கான ‘ஐஃபா’ விருதினை வென்றவர்.

நடிப்பாற்றலை வெளிப்படுத்தும் படங்களில் நடித்தும் பாலிவுட்டில் பெரிய அந்தஸ்தை பெற முடியாத ஷமிதா ஷெட்டி(36), தான் படித்த இன்டீரியர் டிசைன் துறையில் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் பணியாற்றத் தொடங்கினார்.

பாலிவுட்டில் மீண்டும் நுழைய ஆசைப்பட்டவர் ‘கலர்ஸ்’ தொலைக்காட்சியில் ‘ஜலக் திக்குலா ஜா – ரீலோடட்’ என்ற நடனப்போட்டியில் சமீபத்தில் பங்கேற்றார். அடுத்த எபிஸோடுக்காக நடன பயிற்சி செய்யத் துவங்கிய அவருக்கு எதிர்பாராதவிதமாக மூக்கில் அடிபட்டது.

இதைத்தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, மூக்கெலும்பு உடைந்தது தெரிய வந்தது. இதனால், நடன பயிற்சியில் தற்போது ஈடுபடவில்லை.

ஷமிதா ஷெட்டி கடந்த 2009-ஆம் ஆண்டு ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது