மெத்தியுவ்ஸின் அதிரடி ஆட்டம் வீண் போனது, வெற்றியை பறிகொடுத்தது இலங்கை

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


மெத்தியுவ்ஸின் அதிரடி ஆட்டம் வீண் போனது, வெற்றியை பறிகொடுத்தது இலங்கை

இருபதுக்கு 20 உலக கிண்ண தொடரில், இலங்கை அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

மெத்திவ்ஸின் அதிரடி ஆட்டத்தால் தோல்வியின் விளிம்பிற்கே சென்ற இங்கிலாந்திடம் 10 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றியை பறிகொடுத்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து 171 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

ஜே.சி பட்லர் 66 ஓட்டங்களையும் ஜே.ஜே.ரோய் 42 ஓட்டஙகளையும் பெற்றுக் கொண்டனர்.

பந்துவீச்சில் வெண்டர்சே 2 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

அதன்படி 172 என்ற வெற்றி இலக்கை நோக்கி இலங்கை அணி பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கியதும் அடுத்தடுத்து விக்கட்டுக்களை இழந்தது.

இலங்கை அணி ஆரம்பத்திலேயே 4 விக்கட்டுக்களை இழந்து தடுமாறினாலும் மெத்திவ்ஸின் அதிரடி ஆட்டத்தால் இங்கிலாந்து அணி தடுமாறியது.

இலங்கை அணி சார்பாக அதிரடியாக துடுப்பெடுத்தாடிய மெத்திவ்ஸ் ஆட்டமிழக்காது 73 ஓட்டங்களை பெற்றதுடன், கப்புகெதர 30 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

இந்தப் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்ததன் மூலம் அரையிறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழந்துள்ளது.