​மே தினத்தன்று மாத்திரம் இ.போ.ச.வின் வருமானம் என்ன தெரியுமா?

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


​மே தினத்தன்று மாத்திரம் இ.போ.ச.வின் வருமானம் என்ன தெரியுமா?

இந்த முறை இடம்பெற்ற மே தின நிகழ்விற்காக அரச பேருந்துகளை பெற்றுக்கொடுத்ததன் ஊடாக 450 லட்சம் ரூபாய் லாபம் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபையின் உதவி முகாமையாளர் ராஜா குணதிலக இதனை தெரிவித்துள்ளார்.

மே தின பேரணிகளுக்கான போக்குவரத்து செயற்பாடுகளுக்கு வாடகை அடிப்படையில் அரச பேருந்துகள் வழங்கப்பட்டிருந்தன. இதன் அடிப்படையில் இந்த வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த வருடமே மே தினம் ஒன்றில் அதிகமான வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.