மைத்திரியை ஓரங்கட்டி ரணிலை நாடும் மஹிந்த! காரணம் என்ன?

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


மைத்திரியை ஓரங்கட்டி ரணிலை நாடும் மஹிந்த! காரணம் என்ன?

இலங்கையின் அரசியல் வரலாற்றில் முன்னாள் ஜனாதிபதி ஒருவர் தனது உத்தியோகபூர்வ நடவடிக்கைகளுக்கான வசதிகளை அதிகாரத்திலுள்ள ஜனாதிபதி மூலம் பெற்றுக்கொள்ள வேண்டும்.

எனினும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சமகால ஜனாதிபதியை புறக்கணித்து விட்டு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மூலம் தனக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கமைய பிரதமர் ரணிலுடன் தொடர்பை ஏற்படுத்திய மஹிந்த, தனது உத்தியோகபூர்வ வாகத்திற்கான புதிய நான்கு சக்கரங்களை பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வெளிநாட்டு பயணங்களின் காணப்பட வேண்டிய பாதுகாப்பு ஆகிய விடயங்களையும் அவர் பிரதமர் ஊடாக பெற்றுக் கொள்வதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமரிடம் கேள்வி எழுப்பிய போது, “எங்களிடம் உள்ள தனிப்பட்ட உறவு மற்றும் முன்னாள் ஜனாதிபதி என்ற ரீதியில் உள்ள மரியாதையின் நிமித்தம் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டதாக குறிப்பிடத்திருந்தார்.

மஹிந்த ராஜபக்ச பல சந்தர்ப்பங்களில் தனக்கு தேவையானவை பிரதமர் ஊடாக பெற்றுக்கொண்டதாக தெரிய வருகிறது.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு அவசியமான வசதிகள் தன்னால் வழங்கப்படுவதாகவும், அவரை பாதுகாப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாகவும், பிரதமர் அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது