மைத்திரியை கொலை செய்ய சென்னையிலிருந்து ஆட்கள் வரவழைப்பு! ராஜித

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


மைத்திரியை கொலை செய்ய சென்னையிலிருந்து ஆட்கள் வரவழைப்பு! ராஜித

ஜனாதிபதி உள்ளிட்ட தம்மை கொலை செய்வதற்கு மஹிந்த ராஜபக்ச அணியினர் முயற்சித்ததாக அமைச்சர் ராஜித சேனாரட்ன குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

தற்போதும் ஜனாதிபதி உள்ளிட்ட தமக்கு மரண அச்சுறுத்தல்கள் காணப்படுகின்றன.

சென்னையிலிருந்து ஆட்களை வரவழைத்து எம்மை கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டப்பட்டது. இதன் மூலம் கொலையாளிகள் யார் என்பதை அறிந்துகொள்ள முடியாமல் போய்விடும்.

கடந்த தேர்தல்களில் நாம் உள்ளிட்டவர்கள் வெற்றிபெறாது போயிருந்தால் இன்று நாம் உயிரோடு இருந்திருக்க மாட்டோம்.

இவையனைத்தையும் தெரிந்துகொண்டே தாம் தேர்தல் களத்தில் இறங்கினோம் என அமைச்சர் ராஜித சேனாரட்ன மேலும் தெரிவித்துள்ளார்.