மைத்திரி தலைமையில் எடுக்கப்பட்ட அதிரடித் தீர்மானம்


மைத்திரி தலைமையில் எடுக்கப்பட்ட அதிரடித் தீர்மானம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இனி ஒருபோதும் பேச்சுவார்த்தை நடத்தமாட்டோம் என சுயாதீனமாக இயங்குவதற்கு தீர்மானித்துள்ளன 11 கட்சிகள் தீர்மானித்துள்ளன.

இந்தப் பேச்சுவார்த்தை இன்று (12) நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தப்படவிருந்தது.

இதேவேளை, கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக நேற்றைய தினம் இராஜாங்க அமைச்சராக பதவியேற்றுக்கொண்ட, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார, அக்கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக தயாசிறி ஜயசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக விவசாய இராஜாங்க அமைச்சராக பதவி வகித்த சஷீந்திர ராஜபக்ஷ பதவி விலகியதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு சாந்த பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 5 ஆம் திகதி, அரசாங்கத்திலிருந்து வெளியேறி சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட 11 பங்காளிக் கட்சிகளின் நாடாளுமன்ற குழுவினர் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர்கள் குழுவையும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த தினம் சந்தித்திருந்தார்.

குறித்த தரப்பினரால் முன்வைக்கப்பட்ட இடைக்கால அரசாங்கத்தை நிறுவும் யோசனை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இந்தச் சந்திப்பு இடம்பெற்றிருந்தது.

எவ்வாறிருப்பினும், குறித்த சந்திப்பில், இந்த விடயம் தொடர்பில் இணக்கம் காணப்படாத நிலையில், இன்றைய தினம் மீளவும் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஷாந்த பண்டார இராஜாங்க அமைச்சுப் பதவியை ஏற்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்றக் குழுவினர், ஜனாதிபதியுடன் இன்று இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தையைப் புறக்கணிக்கத் தீர்மானித்துள்ளனர்.