பாராளுமன்ற அமர்வின் போது இரண்டு ஊடகவியலாளர்களின் கையடக்கத் தொலைபேசிகள் பறிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிரகீத் பெரேரா மற்றும் கசுன் சமரவீர ஆகியோரின் தொலைபேசிகள் பறிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சுமத்தியதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
ஆளும் கட்சிக் குழுக் கூட்டத்தில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளியில் வந்த போது ஊடகவியலாளர்கள் இருவரும் தமது கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாராளுமன்ற உறுப்பினர்களான டி.வீரசிங்க மற்றும் இந்திக அனுருத்த ஆகியோரால் தமது கைத்தொலைபேசிகள் பறிக்கப்பட்டுள்ளதாக இரண்டு ஊடகவியலாளர்களும் தெரிவித்துள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமனவும் அவர்களை திட்டியதாக சம்பவத்தை நேரில் பார்த்த ஊடகவியலாளர்கள் தெரிவித்தனர்.
இரண்டு ஊடகவியலாளர்களும் பாராளுமன்றத்தை விட்டு வெளியேறியதாகவும் அவர்களுக்கு இதுவரை தொலைபேசிகள் வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.