மொபைல் மூலம் பணம் சம்பாதிக்க ஆசையா? இதோ வழிகள்


மொபைல் மூலம் பணம் சம்பாதிக்க ஆசையா? இதோ வழிகள்

மொபைல் மூலம் பணம் சம்பாதிக்க என்ன வழி? வீட்டில் இருந்தபடியே போனில் பணம் சம்பாதிக்க வழி எப்படி? பணம் சம்பாதிக்கும் வழிகள் என்ன? இது இன்று நிறையபேரின் எண்ணம்.

இன்றைய மாறிவரும் உலகத்தில் அனைவரும் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய அதிக வருமானத்தையே சார்ந்து இருக்கின்றனர். அனைவரும் தங்களின் வருமானத்தை உயர்த்த, தங்களுக்கான பகுதி நேர வேலையை இணையத்தில் தேடி வருகின்றனர்.

இதெற்கென உலகளாவிய அளவில் பல வெப்சைட்கள் உள்ளன. இவை இளைஞர்களுக்கு அவர்களின் திறமைகளுக்கு ஏற்ப வருமானத்தை பெறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தருகின்றன.

நிறைய பேர் இப்போது பொழுதுபோக்கிற்காக மட்டும் இன்டர்நெட் இணைப்பை பயன்படுத்தாமல், அதன் மூலம் வருவாய் ஈட்ட வழிகளை தேடி வருகின்றனர்.

இன்றைய தமிழ் செய்திகள் – Tamil Breaking News Today

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக இருக்கும் இந்நேரத்தில் புதிய கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு உள்ளிட்டவை காரணமாக பலரது பொருளாதார நிலைமை சிக்கலாகி உள்ளது.

எனவே நிறைய பேர் இப்போது பொழுதுபோக்கிற்காக மட்டும் இன்டர்நெட் இணைப்பை பயன்படுத்தாமல், அதன் மூலம் வருவாய் ஈட்ட வழிகளை தேடி வருகின்றனர்.

வீட்டில் இருந்தபடியே சிறந்த வருமானம் மற்றும் வேலை அனுபவத்தை பெற என்னென்ன வழிகள் உள்ளன என்பதை பற்றி பார்ப்போம்.

மொபைல் மூலம் பணம் சம்பாதிக்க என்ன வழி? போனில் பணம் சம்பாதிக்க

இணையத்தினை பயன்படுத்தி பயன்படுத்தி வீட்டில் இருந்தபடியே எளிதில் பணம் சம்பாதிப்பது எப்படி என்பதை பார்ப்போம்.

அதாவது வீட்டில் உட்கார்ந்து இணையம் மூலம் வருவாய் பெற முடியும். இணையம் மூலம் சம்பாதிக்க சில தளங்கள் உள்ளன. அவை ஒரு மணி நேரத்தில் பல ரூபாய் வரை சம்பாதிக்க உங்களுக்கு வாய்ப்பளிக்கின்றன.

வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் வேலைகள் மூலம் பணம் சம்பாதிக்க பல வேலைவாய்ப்புகள் உள்ளன. நீங்கள் ஓய்வு நேரத்தை பயன்படுத்தி பணம் சம்பாதிக்க விரும்பினால், இங்கு குறிப்பிடப்பட்டுள்ள இணையதளங்கள் மூலம் எளிதாகவும் விரைவாகவும் அது சாத்தியப்படும்.

இதற்கு சிறிது நேரம் தேவை. அதன்படி online மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி? வீட்டிலிருந்தபடியே பணம் சம்பாதிப்பது எப்படி? பணம் சம்பாதிக்கும் வழிகள் என்ன என நாங்கள் உங்களுக்குச் சொல்கிறோம்.

வலைப்பதிவு (Blogger) – மொபைல் மூலம் பணம் சம்பாதிக்க

ப்ளாக் மூலம் சம்பாதிக்க முடியும் என்பதொன்றும் பெரிய ரகசியமெல்லாம் இல்லை. ஆனால் வலைப்பதிவுகளை எழுதினாலே பணம் கொட்டத் துவங்கிவிடாது. சில அடிப்படை விதிகளைக் கடைபிடித்தால் மட்டுமே ப்ளாக் நமக்கு லாபம் ஈட்டித் தரும்.

முதலில் ஒரு வலைப்பூவை ஆரம்பித்து அதில் ஏதேனும் ஒரு முக்கியத் துறை குறித்து தொடர்ந்து எழுதி வாருங்கள்.

தொடர்ச்சியாக எழுதிக் கொண்டிருக்க வேண்டும் என்பதும், ப்ளாகை பிரபலமாக்க ஃபேஸ்புக், டிவிட்டர் என வாய்ப்பிருக்கும் அனைத்து வழிகள் மூலமும் முயற்சி செய்ய வேண்டும் என்பதும் முக்கியம்.

வேர்ட்பிரஸ், பிளாகர், டம்ப்ளர், மீடியம், கோஸ்ட், ஸ்கொயர்ஸ்பேஸ் போன்ற பல இலவச பிளாகிங் தளங்கள் உள்ளன. இதிலிருந்து உங்களுக்கு தகுந்த பிளாக்கிங் தளத்தைத் தேர்வுசெய்து எழுதி வாருங்கள்.

யூடியூப் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி-  யூட்யூப் (Youtube): 

யூட்யூபில் வரும் விளம்பரங்களை ஒவ்வொரு முறை 30 வினாடிகளுக்கு மேல் விளம்பரங்களை நாம் பார்க்கும் போதும் அந்த வீடியோ சானலை நடத்துபவர்கள் அதன் மூலம் லாபம் அடைகிறார்கள்.

ஆயிரம் பேர் நமது வீடியோவின் மூலம் விளம்பரங்களைப் பார்த்தால் அந்த சானலை நடத்துபவருக்கு $5 வரை கிடைக்கும்.

வீடியோ எடுத்து வலையேற்றுங்கள். பின்னூட்டங்கள் மூலம் அது பற்றிய விமர்சனங்களை பெற்று, அதைக் கொண்டு மேலும் மேலும் உங்கள் தயாரிப்பை செம்மைப்படுத்திக் கொள்ளுங்கள். இங்கு பொறுமை அவசியம்.

ஆம், குறைந்தது ஒரு வருடத்திற்கேனும் உங்களுக்கு இதில் பெரிய வருமானம் இருக்காது, ஆனால் பதினைந்து நாட்களூக்கு ஒரு முறை கட்டாயம் ஏதேனும் வலையேற்றியபடியே இருக்க வேண்டும்.

இன்ஸ்டாகிராம் – பணம் சம்பாதிக்கும் வழிகள்?

இன்ஸ்டாகிராமில் ஒரு பெரிய அளவிலான followers-ஐ கொண்டிருப்பவர்கள் இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளுயன்சர் என்றழைக்கப்படுகிறார்கள்.

ஏனெனில் அவர்களைப் பின்பற்றுபவர்கள் அவர்களின் கருத்துக்களை பெரிதும் மதிக்கிறார்கள்.

சுருக்கமாக சொன்னால் இன்ஸ்டாவில் ஆயிரக்கணக்கான அல்லது லட்சக்கணக்கான ஆன்லைன் followers கொண்ட ஒரு தனிநபர் இன்ஸ்டா இன்ஃப்ளுயன்சர் ஆவார்.

இன்ஸ்டாஇன்ஃப்ளூயன்சர் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி அல்லது வணிகத்தில் உயர் நபர்கள் மற்றும் பிரபலங்களுடன் சேர்ந்து கேமிங், உணவு, ஆரோக்கியம் மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்டவற்றில் தொடர்பு ஏற்படுத்தி கொண்டு வருவாய் ஈட்டலாம்.

இன்ஸ்டா பதிவுகள் மற்றும் திரைப்படங்கள் ஸ்பான்சர் செய்யப்பட்ட போஸ்ட்கள், தயாரிப்பு மதிப்பீடுகள், ஆன்லைனில் சந்தைப்படுத்தல்மற்றும் ஒருவரின் தனிப்பட்ட பொருட்களை மேம்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் நிறைய சம்பாதிக்க அவர்களுக்கு உதவ கூடும்.

Fiverr.com – மொபைல் மூலம் பணம் சம்பாதிக்க

நீங்கள் சிக்கலில் இருக்கும் நண்பர்களுக்கு ஆலோசனைகளை வாரி வழங்கும் ஆளா? இதே ஆலோசனையை பலருக்கும் தருவதன் மூலம் நீங்கள் பணம் சம்பாதிக்க முடியும் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா?

உங்கள் திறமை எதுவோ அதனைப் பயன்படுத்தி இங்கு பல ஆயிரம் டாலர்களை சம்பாதிக்கலாம். இது உலகில் மிகவும் பிரபலடான ஒரு தலமாகும் என்பது கவனிக்கத்தக்கது.

உங்கள் தயாரிப்புகளை இணையத்தில் விற்பனை செய்யலாம்

நீங்கள் சொந்தமாக ஒரு பொருட்களைத் தயாரிக்கின்றீர்கள் என்றால் அதை ஆப்லைன் மட்டும் இல்லாமல் இணையதளம் மூலமாகவும் விற்பனை செய்யலாம்.

இதற்கு நீங்கள் பிளிப்கார்ட், அமேசான் (Amazon), ஈபே (ebay) உள்ளிட்ட தளங்கள் பதிவு செய்து உங்கள் தயாரிப்பு மற்றும் அதன் விளக்கங்கள், படங்கள் போன்றவற்றை அப்டேட் செய்து விற்பனை செய்யலாம்.

உங்களுடைய தயாரிப்பு, விலை மற்றும் தேவையைப் பொருத்து அதிகளவில் சம்பாதிக்க முடியும்.

உள்ளடக்க எழுதுதல்

உங்களுக்கு ஏதேனும் மொழியில் எந்தப் பிழையும் இல்லாமல் கட்டுரை போன்றவற்றை எழுத முடியும் என்றால் அந்தத் திறனை வைத்துக் கட்டுரைகள் எழுதிச் சம்பாதிக்கலாம்.

அதுமட்டும் இல்லாமல் சில பொருட்கள் தயாரிப்பாளர்கள் தங்கள் தயாரிப்பினை உங்களுக்கு அளித்து அது பற்றியும் கட்டுரை எழுதத் தர அளிப்பார்கள்.

இதற்கு நீங்கள் Fiverr.com அல்லது Upwork.com என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும் இந்த வேலிகளின் மூலமாக மாதம் 8,000 ரூபாய் முதல் 25,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

கூகுள் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி?