மொழி, சமூகங்களுக்கிடையிலான இணைப்புப் பாலமாக இருக்க வேண்டும் – ஜனாதிபதி

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


மொழி, சமூகங்களுக்கிடையிலான இணைப்புப் பாலமாக இருக்க வேண்டும் – ஜனாதிபதி

மொழி, சமூகங்களுக்கிடையிலான இணைப்புப் பாலமாக இருக்க வேண்டும். அது நாட்டிற்குள் மோதலை ஏற்படுத்தும் காரணியாக மாறக் கூடாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

கண்டி தர்மராஜா வித்தியாலயத்தில் இன்று (23) இடம்பெற்ற அகில இலங்கை தமிழ் மொழி தின விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் ஜனாதிபதி இதனைக் கூறினார்.

எந்தவொரு மொழியை கதைப்பவருக்கும் தனது மொழியில் அரச கருமங்களை செய்வதற்கு தேவையான வசதிகளை பெற்றுக் கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அகில இலங்கை தமிழ் மொழி தின விழாவில் நாட்டின் அரச தலைவர் ஒருவர் கலந்துகொண்டது இதுவே முதல் தடவையென்பது குறிப்பிடத்தக்கது