​மோட்டார் சைக்கிள் பந்தய பயிற்சியின் போது விபத்து; நுவரெலியாவில் சம்பவம்

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


​மோட்டார் சைக்கிள் பந்தய பயிற்சியின் போது விபத்து; நுவரெலியாவில் சம்பவம்

நுவரெலியா – உடப்புசல்லாவ வீதி, விக்டோரியா பூங்காவுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் 14 பேர் காயமடைந்துள்ளனர்.

கார் மற்றும் மோட்டார் சைக்கிள் பந்தயம் ஒன்றுக்கான ஒத்திகை பார்க்கும் வேளையிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

பயிற்சியில் ஈடுபட்டிருந்த மோட்டார் சைக்கிள் வீரர் ஒருவர் தனது கட்டுப்பாட்டை இழந்ததால் வீதியை விட்டு விலகிய மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அவ் வேளை இதனை பார்வையிட வந்திருந்த 9 பெண்கள் உட்பட 14 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், காயமடைந்த பெண்களில் அந்தப் பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் ஒருவரும் அடங்குவதாக தெரியவந்துள்ளது.