யாழ் பல்கலைக்கழகத்தின் சில பீடங்களின் கல்விச் செயற்பாடுகள் நாளை ஆரம்பம்

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


யாழ் பல்கலைக்கழகத்தின் சில பீடங்களின் கல்விச் செயற்பாடுகள் நாளை ஆரம்பம்

யாழ் பல்கலைக்கழகத்தில் இடை நிறுத்தப்பட்டுள்ள கலைப்பீடம் மற்றும் முகாமைத்துவ வணிக பீடத்தின் சில பிரிவுகளின் கல்விச் செயற்பாடுகள் நாளை ஆரம்பிக்கப்படும் என பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்துள்ளார்.

அதன்படி நாளை கலை பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் நாளை ஆரம்பிக்கப்படும் அவர் கூறினார்.

அததுடன் நாளை முகாமைத்துவ வணிக பீடத்தின் முதலாம் ஆண்டு மற்றும் இறுதி ஆண்டு மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளும் ஆரம்பிக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதுதவிர கலைப்பீடம் மற்றும் முகாமைத்துவ வணிக பீடத்தின் ஏனைய கல்விச் செயற்பாடுகள் மற்றும் விஞ்ஞான பீடத்தை ஆரம்பிப்பது தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்தும் இடம்பெறுவதாக கூறினார்.

பீடாதிபதிகளுடன் இது தொடர்பில் பேசி நாளையதினம் அறியத்தருவதாக யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்துள்ளார்.