யாழ் மாணவர்களின் உயிரிழப்பு; மைத்திரியை நேரில் சந்தித்தார் சம்பந்தன்

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


யாழ் மாணவர்களின் உயிரிழப்பு; மைத்திரியை நேரில் சந்தித்தார் சம்பந்தன்

யாழ். நகரில் இரு இளைஞர்களின் மரணம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எதிர்க்கட்சித் தலைவர் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று திருகோணமலையில் இடம்பெற்ற ஒரு விசேட நிகழ்விற்கு வருகைத் தந்திருந்த ஜனாதிபதியை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தனது கவலையை தெரிவித்ததோடு கோரிக்கையையும் முன்வைத்துள்ளார்.

இதனை தொடர்ந்து ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ் ahவிசேட பொலிஸ் குழுவொன்று யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு, ஐந்து பொலிஸாரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை மேற்கொண்டு துரித நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொலிஸ்மா அதிபரை கேட்டுக்கொண்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் இரா. சம்பந்தன் பொலிஸ்மா அதிபரோடு தொடர்பு கொண்டு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். துரித கதியில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.