யுவதியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கழுத்தை அறுத்து கொன்ற காதலன்!

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


யுவதியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கழுத்தை அறுத்து கொன்ற காதலன்!

காலி மாவட்டத்தின் வந்துரம்ப பிட்டிஹராவ பிரதேசத்தில் 17 வயது யுவதி காதலன் என கூறப்படும் நபரினால் பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு, கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்றிரவு நடந்ததாக வந்துரம்ப பொலிஸார் கூறியுள்ளனர்.

யுவதியின் காதலன் எனக் கூறப்படும் நபரே இந்த கொலையை செய்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

சந்தேக நபர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.

மரணம் தொடர்பான நீதவான் விசாரணைகள் இன்று நடைபெறவுள்ளன.

சம்பவம் குறித்து வந்துரம்ப பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.