யுவராஜ் சிங்கிற்கு திருமண பரிசாக ப்ரீத்தி ஜிந்தா என்ன கொடுக்கப் போகிறார் தெரியுமா?

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


யுவராஜ் சிங்கிற்கு திருமண பரிசாக ப்ரீத்தி ஜிந்தா என்ன கொடுக்கப் போகிறார் தெரியுமா?

இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் லண்டன் நடிகையான ஹேசல் கீச்சை விரைவில் திருமணம் செய்யவிருக்கிறார்.

இந்நிலையில் யுவராஜ் சிங்கிற்கு திருமண பரிசாக ’ராக்கி’ பெட்டி ஒன்றை பரிசளிக்க உள்ளதாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளரும், பாலிவுட் நடிகையுமானப்ரீத்தி ஜிந்தா கிண்டலாக கூறியுள்ளார்.

முன்னதாக யுவராஜ் சிங் பஞ்சாப் அணியில் விளையாடிய போது ப்ரீத்தி ஜிந்தாவுடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்டார். இதனாலே அவர் அவ்வாறு கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், ”யுவராஜ் சிங் திருமணம் செய்து கொள்ளவிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நாங்கள் பல விடயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறோம். அவர் எங்கள் அணியில் ஒரு அங்கமாக இருந்து ஏற்ற இறக்கங்களை பார்த்திருக்கிறார்.

யுவராஜ் சிங், பிரட் லீ இருவரையும் என்னுடன் சேர்த்து வைத்து பேசியதை நான் மறக்க முடியாது. அவர்கள் இருவரும் எனது சகோதரர்கள். நான் அவர்களை தனிப்பட்ட முறையில் சந்தித்து கையில் ‘ராக்கி’ கட்டுவேன்” என்று கூறியுள்ளார்.

ப்ரீத்தி ஜிந்தா சமீபத்தில் தான் அமெரிக்க தொழிலதிபர் ஜெனி குட்எனப் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.