ரஜினி குடும்பத்துடன் அமெரிக்கா சென்றார்

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


ரஜினி குடும்பத்துடன் அமெரிக்கா சென்றார்

நடிகர் ரஜினிகாந்த் ஓய்வுக்காக குடும்பத்தாருடன் அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கபாலி’ படத்தின் டப்பிங் வேலைகளை முடித்துதந்த ரஜினிகாந்த், சங்கரின் இயக்கத்தில் உருவாகிவரும் ‘2.0’ படத்தில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில், சிறுஓய்வுக்காக வெளிநாடு செல்ல முடிவெடுத்த அவர், குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். சுமார் இருவார காலம் அங்கு தங்கியிருக்கும் ரஜினிகாந்த் ஜுன் மாதம் இந்தியா திரும்பி, வழக்கத்தைவிட அதிகமான சுறுசுறுப்புடனும் புத்துணர்ச்சியுடனும் ‘2.0’ படப்பிடிப்பில் பங்கேற்பார் என தெரிகிறது