ரவிச்சந்திரன் அஸ்வினை பின்தள்ளிய யாசிர்ஷா

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


ரவிச்சந்திரன் அஸ்வினை பின்தள்ளிய யாசிர்ஷா

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் யாசிர் ஷா குறைந்த போட்டியில் 100 விக்கெட்டை வீழ்த்திய ஆசிய கிரிக்கெட் வீரர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார்.

பாகிஸ்தான் – மேற்கிந்திய தீவுகள் இடையேயான டெஸ்ட் போட்டி துபாயில் பகல் இரவு ஆட்டமாக நடந்து வருகிறது.

இந்த ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்ஸில் பாகிஸ்தானின் வலது கை சுழற்பந்து வீச்சாளர் யாசிர் ஷா ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்மூலம் தனது 17 வது டெஸ்ட் போட்டியில் ஆடிய யாசிர் ஷா ஆசிய வீரர்களிலேயே குறைந்த போட்டியில் 100 விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இதன் மூலம் 18 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் இருந்த இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினின் சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது