றம்புக்கனையில் பெரும் பதற்றம் – போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு


றம்புக்கனையில் பெரும் பதற்றம் – போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு

ரம்புக்கனையில் இடம்பெற்ற போராட்டத்தின் போது பொலிஸாரால் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த 11 போராட்டக்காரர்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கேகாலை வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரியவருகிறது.

எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வைக் கோரி இன்று அதிகாலை 1.30 மணி முதல், கண்டி – கொழும்பு ரயில் மார்க்கத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

ஏனையோர் ரம்புக்கனை – கேகாலை, குருநாகல் மற்றும் மாவனெல்ல வீதிகளை மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

15 மணி நேரமாக இடம்பெற்ற போராட்டத்தில் பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் இடம்பெற்றதையடுத்து, ரம்புக்கனை பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் நடத்தியுள்ளனர்.