லக்கல பொலிஸ் நிலையத்தில் இருந்து திருடப்பட்ட ஆயுதங்கள் விகாரையில் மீட்பு

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


லக்கல பொலிஸ் நிலையத்தில் இருந்து திருடப்பட்ட ஆயுதங்கள் விகாரையில் மீட்பு

லக்கல பொலிஸ் நிலையத்தின் ஆயுத வைப்பகத்தில் இருந்து டீ 56 ரக துப்பாக்கி ஒன்றும் 05 ரிவோல்வர்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அருகில் உள்ள விகாரையின் நீர் தாங்கிக்குள் இருந்து அவை மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் அதிகாலை 1.00 மணியளவில் லக்கல பொலிஸ் நிலையத்தின் ஆயுத வைப்பகத்தில் இருந்து டீ 56 ரக துப்பாக்கி ஒன்றும் 05 ரிவோல்வர்களும் திருடப்பட்டன.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளும் பொறுப்பு குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு வழங்கப்பட்டிருந்ததுடன், துப்பாக்கிகள் திருடப்பட்ட சமயத்தில் பணியில் இருந்த பொலிஸ் அதிகாரிகள் மூவர் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.