லண்டன் வரலாற்றில் முதலாவது முஸ்லிம் மேயர் பதவியேற்பு

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


லண்டன் வரலாற்றில் முதலாவது முஸ்லிம் மேயர் பதவியேற்பு

நேற்று முன்தினம் இடம்பெற்ற லண்டன் மேயரைத் தெரிவு செய்வதற்கான தேர்தலில் வெற்றி பெற்று, லண்டன் வரலாற்றில் முதலாவது முஸ்லிம் மேயர் என்ற பெருமையைப் பெற்றுள்ள சதீக் கான் லண்டன் மேயராகக் கையொப்பமிட்டு தன்னுடைய கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

சௌத்வோக்கில் இடம்பெற்ற கெதெட்ரல் நிகழ்வின்போது அவர் கையொப்பமிட்டார்.

அதற்கு முன்னர் அங்கு சென்ற புதிய மேயரை பெருந்தொகையான மக்கள் முன்னிலையில், சௌத்வோக்கின் கெதெட்ரல் கிறிஸ்தவ டீன் வரவேற்றதுடன், புதிய மேயருக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

அதன் பின்னர் அங்கு கருத்து தெரிவித்த சதீக் கான், “மேயராக தெரிவு செய்த லண்டன் வாசிகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன்.

நான் கனவில்கூட நினைத்திருக்காத இந்தப் பதவிக்கு கொண்டுவந்த மக்களுக்கு சேவையாற்ற கடமைப்பட்டுள்ளேன்.

எனது இந்தப் பதவியில் லண்டன் நகரின் முன்னேற்றத்திற்காக நான் முழுமையாக பணியாற்றுவேன்” என்று தெரிவித்தார்.