லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு


லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு

முத்துராஜவெல எரிவாயு முனையத்தில் எரிவாயு தரையிறக்கம் மற்றும் விநியோக செயற்பாடுகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இன்று தொடக்கம் எதிர்வரும் 17ஆம் திகதி வரை இவ்வாறு செயற்பாடுகள் இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு லிட்ரோ எரிவாயு நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது.

புத்தாண்டை முன்னிட்டு குறித்த முனையத்தின் பணிகள், இன்று முதல் எதிர்வரும் 17 ஆம் திகதிவரை இடைநிறுத்தப்படவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் எரிவாயு விநியோக முனையத்தின் பணிகள் மீள ஆரம்பிக்கப்படுமென லிட்ரோ கேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.