வசீம் தாஜுதீன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பொலிஸ் OIC விளக்கமறியலில்

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


வசீம் தாஜுதீன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பொலிஸ் OIC விளக்கமறியலில்

நாரஹேன்பிட பொலிஸ் நிலைய குற்றப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் சுமித் சம்பிக்க பெரேரா விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளார்.

றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீனின் மரணம் தொடர்பான வழக்கில் சாட்சிகளை மறைக்க முற்பட்ட குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று இவர் கைதுசெய்யப்பட்டார்.

இதனையடுத்து இன்று, அவரை கொழும்பு மேலதிக நீதவான் எதிர்வரும் 5ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.