வடக்கு கிழக்கை ஒன்றிணைக்க வேண்டிய தேவை முஸ்லிம்களுக்கு இல்லை

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


வடக்கு கிழக்கை ஒன்றிணைக்க வேண்டிய தேவை முஸ்லிம்களுக்கு இல்லை

வடக்கு – கிழக்கு மாகாணங்களை ஒன்றாக இணைக்க வேண்டும் என்ற தேவை முஸ்லிம் மக்களுக்கு இல்லை என விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபையினால் முன்வைக்கப்பட்டுள்ள இனப்பிரச்சினை தொடர்பான தீர்வுத்திட்ட யோசனை முஸ்லிம் மக்களை ஒருபோதும் திருப்திப்படுத்தாது எனக் குறிப்பிட்ட அவர் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் விடயத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் நாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்குடன் செயற்படாது எனத் தெரிவித்தார்.

மட்டக்களப்பு – கல்முனை சாஹிரா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் தெரிவித்தார்.