வடமாகாண சபையின் அரசியலமைப்பு யோசனை மீதான விவாதம் ஒத்திவைப்பு

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


வடமாகாண சபையின் அரசியலமைப்பு யோசனை மீதான விவாதம் ஒத்திவைப்பு

அரசியல் தீர்வு மற்றும் அரசியலமைப்புத் திருத்தத்திற்கான கொள்கை வரைபு தொடர்பில் வட மாகாண சபையினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை குறித்த விவாதம் இன்று ஒத்திவைக்கப்பட்டது.

மாகாண சபை உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட திருத்தங்கள் தொடர்பில் பரிசீலனை செய்ய கால அவகாசம் தேவை என இதன்போது முதலமைச்சர் சி.வி விக்னேஷ்வரன் சபையில் தெரிவித்தார்.

அரசியல் தீர்வு மற்றும் அரசியலமைப்புத் திருத்தத்திற்கான கொள்கை வரைபு தொடர்பிலான இரண்டாம் நாள் விவாதம் இன்று வட மாகாண சபையில் ஆரம்பமானது.

இந்த பிரேரணை கடந்த அமர்வில் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட போது பிரேரணை தொடர்பில் மாகாண சபை உறுப்பினர்களால் பல திருத்தங்கள் முன்வைக்கப்பட்டன.