வற் வரிக்கு எதிரான போராட்டங்கள் தொடர்பில் மக்களை தெளிவுபடுத்துமாறு பிரதமர் ஆலோசனை!

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


வற் வரிக்கு எதிரான போராட்டங்கள் தொடர்பில் மக்களை தெளிவுபடுத்துமாறு பிரதமர் ஆலோசனை!

வற் வரி அதிகரிப்பிற்கு எதிர்ப்பை வெளியிட்டு கடைகளை மூடுதல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருவோரை தெளிவுபடுத்துமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களில் உடனடியாக தலையீடு செய்து மக்களுக்கு இது குறித்து தெளிவுபடுத்துமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கட்சியின் பிரதிநிதிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

மிகவும் திட்டமிட்ட வகையில் வர்த்தகர்களை பிழையான வழியில் இட்டுச் சென்று கடைகளை மூடி அரசாங்கத்தை ஸ்திரமற்றதாக்க சிலர் முயற்சிக்கின்றனர்.

இதனை தோற்கடிப்பதற்கு உடனடியாக தலையீடு செய்யுமாறும் கட்சிப் பிரதிநிதிகளிடம் பிரதமர் கோரியுள்ளார்.

இது குறித்து தொகுதி அமைப்பாளர்கள் தெளிவூட்டப்பட்டுள்ளனர். கம்பஹா, மாத்தறை, காலி உள்ளிட்ட சில பகுதிகளில் கடைகள் மூடப்பட்டு வற் வரிக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இந்தப் போராட்டங்களில் பங்கேற்ற வர்த்தகர்கள் மற்றும் மக்களுக்கு அரசாங்கத்திற்கு எதிரான சூழ்ச்சித் திட்டம் குறித்து தெளிவுபடுத்தப்பட வேண்டுமென பிரதமர் அறிவுரை வழங்கியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் இது குறித்து கட்சியின் பிரதிநிதிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.