கொழும்பு உட்பட நான்கு மாவட்டங்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து


கொழும்பு உட்பட நான்கு மாவட்டங்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து

இலங்கையில் நான்கு நகரங்களில் வளி மாசடைதல் அதிகரித்துள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் சுற்றாடல் பிரிவு பணிப்பாளர் சரத் பிரேமசிறி குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, கொழும்பு, யாழ்ப்பாணம், கண்டி மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களிலேயே இவ்வாறு வளி மாசடைதல் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

கடும் காற்று வீசுவதால், வளி மாசடைவதற்கான காரணமாக அமைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, மின்பிறப்பாக்கிகள் அதிகமாக பயன்படுத்தப்படுவதாலும் வளி மாசடைதல் அதிகரித்துள்ளதாக சரத் பிரேமசிறி தெரிவிக்கின்றார்.