வாகனத்தின் இறுதி இலக்கத்தின்படி எரிபொருள் வழங்க யோசனை


வாகனத்தின் இறுதி இலக்கத்தின்படி எரிபொருள் வழங்க யோசனை

எரிபொருளை வழங்கும் போது வாகனத்தின் இறுதி இலக்கத்திற்கு அமைய மாதத்தில் ஒரு நாள் அல்லது வாரத்தில் ஒரு நாள் மாத்திரம் எரிபொருளை வழங்கும் வேலைத்திட்டம் தொடர்பான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

குறைந்தளவிலான எரிபொருள் தொகையை அத்தியவசிய சேவைகளுக்காக முகாமைத்துவம் செய்வது இதன் நோக்கம் எனக் கூறப்படுகிறது.

இதில் தனியார் பேருந்துகள்,பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள், அலுவலகங்களின் அதிகாரிகள், கொள்கலன் பெட்டி போக்குவரத்து உட்பட அத்தியவசிய சேவைகளுக்கு முன்னுரிமை வழங்கி எரிபொருளை விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஏனைய வாகனங்களுக்கு மாதாந்தம் குறிப்பிட்ட எரிபொருள் தொகை மாத்திரம் வழங்கப்பட உள்ளது.