வாசுதேவ, கம்மன்பில, விமல் எடுத்த மற்றொரு அதிரடித் தீர்மானம்


வாசுதேவ, கம்மன்பில, விமல் எடுத்த மற்றொரு அதிரடித் தீர்மானம்

அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, முன்னாள் அமைச்சர்களான உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் எதிர்வரும் 23ம் திகதி நடைபெறவுள்ள சர்வ கட்சி மாநாட்டில் கலந்துக்கொள்வதில்லை என தீர்மானித்துள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கோரிக்கைக்கு அமைய, எதிர்வரும் 23ம் திகதி சர்வகட்சி மாநாடு நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த முறை சர்வ கட்சி மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எனினும் குறித்த மாநாட்டில் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரது கட்சிகளின் யோசனைகளும் பரிந்துரைகளும் கட்சியின் ஏனைய பிரதிநிதிகள் ஊடாக முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.