விடுதலைப் புலிகளின் முன்னாள் பொறுப்பாளர் கைது!

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


விடுதலைப் புலிகளின் முன்னாள் பொறுப்பாளர் கைது!

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வுத்துறை பொறுப்பாளராக செயற்பட்ட பிரபா என்கின்ற கிருஸ்ணப்பிள்ளை கலைநேசன் இன்று மட்டக்களப்பில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

காலை தீவிரவாத புலனாய்வுப் பிரிவினரால் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளை மீள கட்டியெழுப்ப முற்படுவதாக கூறப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸார் கூறியுள்ளனர்.

இறுதி யுத்தத்தில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பிரபா இராணுவத்தினரிடம் இருப்பதாக தகவல் வெளியாகியிருந்ததாகவும், பின்னர் கடந்த 2013ம் ஆண்டு காலப்பகுதியில் இவர் புனர்வாழ்வு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருந்ததாகவும் அவரது மனைவி கயல்விழி, ஊடகம் ஒன்றுக்கு குறிப்பிட்டுள்ளார்.