விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 936 ஆக அதிகரிப்பு

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 936 ஆக அதிகரிப்பு

இந்த வருடத்தில் இதுவரை வீதி விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 936 ஆக அதிகரித்துள்ளதாக வீதி பாதுகாப்பிற்கான தேசிய சபை அறிவித்துள்ளது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இந்த வருடத்தின் முதல் 4 மாதங்களில் வீதி விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வீதி பாதுகாப்பிற்கான தேசிய சபை தெரிவித்துள்ளது.

மோட்டார் சைக்கிள் விபத்துக்களினாலேயே அதிக உயிர் சேதங்கள் ஏற்படுகின்றதாக சபையின் செயலாளர் டாக்டர் சிசிர கோத்தாகொட தெரிவித்துள்ளார்.

முச்சக்கரவண்டியில் பயணித்தவர்கள் மற்றும் பாதசாரிகள் விபத்துக்களில் அதிகமாக உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

கவனயீனம் காரணமாக வாகனம் செலுத்துகின்றமை மற்றும் மதுபோதையில் வாகனம் செலுத்துவதினாலேயே அதிக விபத்துக்கள் ஏற்படுவதாகவும் தெரிவித்தார் .

இதேவேளை நாட்டில் பல பாகங்களிலும் ஏற்பட்ட விபத்துக்களின் பிரகாரம் ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.