விமல் வீரவன்சவின் மனைவிக்கு 02 வருட சிறைத்தண்டனை – அதிரடி தீர்ப்பு


விமல் வீரவன்சவின் மனைவிக்கு 02 வருட சிறைத்தண்டனை – அதிரடி தீர்ப்பு

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்சவின் மனைவி சஷி வீரவங்சவுக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

போலி ஆவணங்களை கொண்டு, கடவுச்சீட்டை தயாரித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த வழக்கு விசாரணை இன்று இடம்பெற்றிருந்ததற்கு அமைய, இது தொடர்பில் விசாரணை செய்த, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தின் தலைமை நீதவான், புத்திக ஸ்ரீ ராகலவினால் 2 வருட சிறைத்தண்டனை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அத்துடன், ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த அபராத தொகையை செலுத்தத் தவறினால், இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு மேலதிகமாக, ஆறு மாதகால சிறைத் தண்டனையை விதித்து, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விமல் வீரவன்சவின் மனைவி CID யில் செய்த முறைப்பாடு

விமல் வீரவன்சவின் கட்சியில் வௌிநாட்டு உளவாளிகள்?